LXIX

றும் என்பதும், இனமில்லாத ஐகார ஒளகாரங்களின் பின்னர் முறையே இகர  உகரங்கள் அளபெடைக்கண் வரும் என்பதும்.
                                                                         19

ஙஞண நமன வயலள ஆய்தம் என்ற பத்தும் மொழிக்கண் குற்றெழுத்து குறிலிணையெழுத்து இவற்றையடுத்து மொழியிடையிலும் இறுதிக்கண்ணும் அளபெடுத்தலால் ஒற்றளபெடை தோன்றும் என்பது.
                                                                         20

தன்னை உணர்த்துதல், அளபெடுத்தல் என்ற இரண்டும் அல்லாதவழி மொழி மூன்றிடத்தும் ஐகாரமும், மொழி முதற்கண் ஒளகாரமும் குறுகுதலான் முறையே ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் நிகழும் என்பது.
                                                                         21

லள மெய்திரிதலான் வரும் னகர ணகரங்களின் முன் ஒருமொழிக்கண்ணும், வருமொழி முதலில் வகரம் வருதலான் இருமொழிக்கண்ணும் மொழியீற்று மகரம் மகரக்குறுக்கமாம் என்பது.
                                                                         22

எழுத்துக்கள் யாவும் பழைய வரிவடிவினை உடையனவே என்பதும், பண்டு மெய்யொடு, எகரமும் ஒகரமும் ஏகார ஓகாரங்களிலிருந்து பிரித்துணரப் புள்ளிபெற்று வந்தன என்பதும்.
                                                                        23

மாத்திரையின் அளவு கண்ணிமைப் பொழுதும் கைந்நொடிப்பொழுதும் என்பதும், நெடில் இரண்டும், குறிலும் ஐஒளக் குறுக்கங்களும் ஒன்றும், ஆய்தம் மெய் குற்றியலிகரம் குற்றியலுகரம் அரையும், மகரக்குறுக்கம் காலும் ஆகிய மாத்திரை பெறும் என்பதும்.
                                                                        24

இசை, வினி, பண்டமாற்று முதலியவற்றில் உயிரும் மெய்யும் தம் அளவுகடந்து ஒலிக்கும் என்பதும்.
                                                                         25