LXXI

ப ம ய வ ற வ் வும், மம்முன் பயவவும், யரழமுன் மொழிமுதல் மெய்யும், லளமுன் கசபவயவும் மயங்கும் என்பது.
                                                                        32

யரழமுன் கசதப ஙஞநம ஈரொற்றாதலும், ரகர ழகர ஈற்றுமுன் தனிக்குறில் வாராமையும்
                                                                        33

லகர னகர மெய்களின் திரிபாகிய னகர ணகரங்களொடு ஈற்றில் ஈரொற்றாய் மகரம் வரும் என்பது.
                                                                        34

தம் மரபு கூறுமிடத்து முதல்நிலை இடைநிலை இறுதிநிலை என்ற வரையறை எழுத்திற்கு இன்று என்பது.
                                                                         35

அஇ, அய், அஉ, அவ் என்பனவும், ஒன்றன் பின் ஒன்று ஓசை விரவிவரும் இகரமும் யகரமும், ஆகிய எழுத்துப்போலிகள் கடியப்படும் என்பது.
                                                                         36

நெட்டுயிர் காரமும், ஐஒள காரத்தொடு கானும் உயிர்க்குறிலும் உயிர்மெய்க் குறிலும் காரம், கான், கரம் என்ற மூன்றும் ஆகிய சாரியை பெறும் என்பதும், மெய்யின் இயக்கம் அகரத்தொடு சிவணும் என்பதும்.
                                                                         37