உயீரீற்றுப் புணரியல்
பொதுவிதி

மெய்யையும் உயிரையும் முதலாகவும், ஈறாகவும் கொண்டுள்ள பெயர் வினை இடைஉரி என்ற நால்வகைப்பட்ட நிலைமொழி வருமொழிகள், தம்மொடு தாமும், தம்மொடு பிறவும் அல்வழிப் பொருளிலோ வேற்றுமைப்பொருளிலோ பொருந்துமிடத்து, நிலைமொழியும், வருமொழியும் இயல்பாகவோ விகாரப்பட்டோ பொருந்தும் பொருத்தமே புணர்ச்சி என்பது.
                                                                        53

இரண்டு முதல் ஏழு ஈறாகிய வேற்றுமை விரிந்தும் தொக்கும் புணரும் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி என்பதும், எழுவாய்த்தொடர், விளித் தொடர், தெரிநிலை வினைமுற்றுத்தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், அடுக்குத்தொடர், உவமைத்தொடர், உம்மைத்தொடர் என்பன அல்வழிப் புணர்ச்சி என்பதும்.
                                                                        54

வேற்றுமை பெயருக்குப் பின்னரேயே வரும் என்பது.
                                                                        55

மெய்யும் உயிரும் உயிர்மெய்யுமாகிய எழுத்தும் சாரியையும் தோன்றலும், வடிவு வேறுபடலும், கெடலும் விகாரப் புணர்ச்சி என்பது.
                                                                        56

வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தல் எனச் செய்யுள் விகாரம் அறு வகைப்படும் என்பது.
                                                                        57

முதற்குறை இடைக்குறை கடைக்குறை எனக் குறை மூவகைப்படும் என்பது.
                                                                        58