LXXXVIII மாகவும், மென்கணம்வர வந்த மெல்லெழுத்தாகவும் திரிந்தும், இடைக்கணம்வர இயல்பாகவும் புணரும் என்பது. 144 தெவ் என்ற சொல் தொழிற் பெயர்போல உகரம் பெற்றுப் புணரும் என்பதும், வருமொழி முதற்கண் மகரம் வரின் நிலைமொழியீற்று வகரமும் மகரமாகத்திரியும் என்பதும். 145 உருபு புணர்ச்சிக்கண் கொள்ளப்படும் புணர்ச்சி முடிபு உயிரீறு ஒற்றீறு ஆகிய ஈரீற்றுப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் கொள்ளப்படும் என்பது. 146 இடைச்சொற்கள் உரிச்சொற்கள் வட சொற்கள் போலிச்சொற்கள் மரூஉச்சொற்கள் இவை முற்கூறப்பட்ட விதிகொள்ளாவிடத்து, இது வகை வழக்கு முறைகளையும் கடைப்பிடித்து அவற்றிற்கு ஏற்பப் புணர்க்கப்படும் என்பது. 147 |