LXXXXVI

முரண்பட்டிருப்பது பாட்டியல் இயற்றியவர் நூலாசிரியர் அல்லர் என்பதை மெய்ப்பிப்பதாய் உள்ளது.

தோன்றா தோன்றித் துறைபல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி யன்றே

ஆதலின், நூல் வரைந்தவரே பாயிரமும் வரைதல் கூடாது. எனவே, பாட்டனார் ஆகிய வைத்தியநாத தேசிகரையும் பெரிய தந்தையராகிய சதாசிவ தேசிகரையும் தந்தையாராகிய தியாகராச தேசிகரையும் போற்றி நூலாசிரியருடைய பெயரனாராகிய வைத்தியநாத தேசிகர் இப்பாயிரம் செய்தார் என்பது.]