| ம | ||
| மகவு | - | குழவி |
| மகார் | - | பிள்ளைகள் |
| மங்குல்வானம் | - | கார்மேகம் |
| மஞ்சு | - | வெண்மேகம் |
| மஞ்ஞை | - | மயில் |
| மடவியர் | - | மகளிர் |
| மடிதல் | - | சோம்புதல், தூங்குதல் |
| மடுக்கு | - | செலுத்துவேன் |
| மடை | - | தேவர்க்குப் படைக்கும் உணவு |
| மணியக்கு | - | அக்குமணி |
| மண்ணுதல் | - | கழுவுதல் |
| மதர்த்தல் | - | செருக்குதல் |
| மதுகை | - | வெற்றி |
| மதைஇய | - | மதர்த்த |
| மத்தகம் | - | நெற்றி |
| மந்தமாருதம் | - | தென்றல் |
| மந்தி | - | பெண்குரங்கு |
| மம்மர் | - | மயக்கம் |
| மரீஇயோர் | - | மருவியவர் |
| மரு | - | வாசனை |
| மருங்குதல் | - | இடை |
| மருப்பு | - | தந்தம் |
| மருள் | - | மயக்கம் |
| மலைதல் | - | போரிடுதல், மேற்கோடல் |
| மலைத்தல் | - | மாறுபடுதல் |
| மல்லல் | - | வளப்பம் |
| மல்லை | - | வளப்பம் |
| மவ்வல் | - | முல்லை |
| மழ | - | இளமை, குழவி |
| மழை | - | மேகம், குளிர்ச்சி |
| மறலி | - | இயமன் |
| மறி | - | மான் கன்று |
| மறுகல் | - | மனம்சோர்தல் |
|
மறுகு |
- | தெரு |
| மறந்தைக்க | - | மறப்பாயாக |
| மறையாதீம் | - | மறையாதே |