சொல் | பொருள் | ||
அ | |||
அகடு | -- | வயிறு | 82 |
அகலம் | -- | மார்பு | 212 |
அகவுதல் | -- | ஒலித்தல் | 206 |
அகைதல் | -- | விளங்குதல் | 147 |
அசலம் | -- | மலை | 201 |
அச்சுதன் | -- | கேடில்லாதவன் | 306 |
அடை | -- | இலை | 85, 138 |
அண்டர் | -- | தேவர் | 292, 364 |
அணங்குதல் | -- | வருத்துதல் | 89 |
அணவுதல் | -- | நெருங்குதல் | 82, 193 |
அதரம் | -- | உதடு | 206, 398 |
அதுலன் | -- | ஒப்பற்றவன் | 258 |
அநங்கன் | -- | மன்மதன் | 188, 372 |
அந்தரம் | -- | ஆகாயம், கேடு | 306 |
அமலுதல் | -- | தழுவுதல் | 375 |
அம்புயம் | -- | தாமரைப்பூ | 165, 172, 176 |
அம்போருகம் | -- | தாமரைப்பூ | 140, 201, 217, 230 |
அயர்தல் | -- | வருந்துதல் | 261 |
அயில் | -- | வேல் | 381 |
அரந்தை | -- | துன்பம் | 366 |
அரவிந்தம் | -- | தாமரைப்பூ | 201, 266 |
அரி | -- | சிங்கம் | 196, 300, 316 |
அரி | -- | நெற்சூடு | 72, 300 |
அரி | -- | வண்டு | 357 |
அரிமான் | -- | சிங்கமாகிய விலங்கு | 89 |
அரியேறு | -- | ஆண் சிங்கம் | 72, 107 |
அருவர் | -- | தமிழ்நாட்டவர் | 412 |
அலங்கல் | -- | மாலை | 181 |
அல்லி | -- | அகவிதழ் | 108, 364 |
அவுணர் | -- | அசுரர் | 107, 131 |
அளகம் | -- | கூந்தல் | 123, 125, 127, 161, 175, 375 |
அளக்கர் | -- | கடல் | 367 |
அளி | -- | வண்டு | 123, 176, 230, 330, 356, 395 |
அளி | -- | கருணை | 160, 176, 330 |
அறுகால் | -- | வண்டு | 357 |
அற்றம் | -- | சோர்வுறும் காலம் | 209 |