அருஞ்சொற் பொருள் 
 
 
 
 
 
 
 | சொல் |  | பொருள் | 
 
 | ப | 
 
 | பகழி | -- | அம்பு | 147 | 
 
 | பங்கயம் | -- | தாமரைப்பூ | 201, 266 | 
 
 | பஞ்சி | -- | செம்பஞ்சிக்குழம்பு | 408 | 
 
 | படி | -- | மேனி | 181 | 
 
 | பணம் | -- | படம் | 327 | 
 
 | பணி | -- | பாம்பு | 365 | 
 
 | பணி | -- | ஆபரணம் | 82, 365 | 
			
 | பணை | -- | பணை | 269 | 
 
 | பணை | -- | மூங்கில் | 269, 302 | 
 
 | பதுமம் | -- | தாமரைப்பூ | 201, 230 | 
 
 | பத்தி | -- | கோடு | 82 | 
 
 | பயம் | -- | பயன் | 214 | 
 
 | பரவை | -- | கடல் | 222 | 
 
 | பரிதல் | -- | அறுதல் | 70 | 
 
 | பவனம் | -- | இடம் | 375 | 
 
 | பாண் | -- | பாணன் | 285 | 
 
 | பாந்தள் | -- | பாம்பு | 347 | 
 
 | பாய்த்துள் | -- | பாய்ச்சல் | 147 | 
 
 | பிடி | -- | பெண்யானை | 182 | 
 
 | பிறழ்தல் | -- | கிளர்ந்து அசைதல் | 103 | 
 
 | பீலி | -- | மயிற்றோகை | 240 | 
 
 | புணரி | -- | கடல் | 155 | 
 
 | புண்டரிகம் | -- | தாமரைப் பூ | 316, 330, 432 | 
 
 | புண்டரிகம் | -- | புலி | 316 | 
 
 | புத்தேள் | -- | தேவன் | 148 | 
 
 | புயல் | -- | (கார்) மேகம் | 103, 175, 193, 253, 257 | 
 
 | புய்த்தல் | -- | பற்றியிழுத்தல் | 418 | 
 
 | புரந்தரன் | -- | இந்திரன் | 310 | 
 
 | புரம் | -- | முப்புரம் | 247 | 
 
 | புரவு | -- | புரத்தல் | 265, 348 | 
 
 | புரை | -- | இடம் | 253 | 
 
 | புரைதல் | -- | ஒத்தல் | 104 | 
 
 | புலவி | -- | ஊடுதல் | 188 | 
 
 | புல்லாதார் | -- | பகைவர் | 70 | 
 
 | புல்லுதல் | -- | தழுவுதல் | 278, 317, 318, 344 | 
 
 | புழை | -- | உள்துளை | 70, 162 | 
 
 | புளினம் | -- | மணல்மேடு | 355 | 
			
 | புறந்தரல் | -- | காத்தல் | 150 | 
 
 | புறவு | -- | முல்லை | 177 | 
 
 | பூவை | -- | காயா | 63 | 
 
 | பூழியன் | -- | சோழன் | 320 | 
 
 | பெண்ணை | -- | பனை | 182 | 
 
 | பெற்றம் | -- | விடை | 359 | 
 
 | பேதுறவு | -- | மயக்கம் | 347 | 
 
 | பேதுறுத்தல் | -- | மயக்குதல் | 61 | 
 
 | பைது | -- | பசுமை | 149 | 
 
 | பொருநர் | -- | வேடந்தரித்தாடுவோர் | 424 | 
 
 | பொருப்பு | -- | மலை | 35, 70, 161, 201 | 
 
 | போழ் | -- | வார் | 135 | 
