புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
கச்சம் இல் - அளவு இல்லாத
கடிகை - நாழிகை
கடும்பு - குடும்பம்
கட்டங்கம் - ஒருபடைக்கலம்; மழு
கம்புள் - வானம்பாடி
கருவி - தொகுதி
கலிங்கம் - ஆடை
கலிப்பாறு  - ஆரவாரத்தையுடைய பாறாகிய மரக்கலங்கள்
கழறல் - இடித்துரைத்தல்
கழுது - பேய்
கறையடி - உரல்போன்ற அடியையுடைய யானை
கன்னி - கொற்றவை; வெற்றிமகள்