viii

கொடுத்துவிடுவதா என்ற தடுமாற்றம் எழும். இங்கு இரண்டாவது முறையே கையாளப்பட்டுள்ளது. ஏனெனில் இந் நூலைப் படிப்போர் மிகக் குறைவான எண்ணிக்கை உடையவராக இருப்பர். திருத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் நூலைப் படிக்க முற்படுபவரும் படிப்பதற்குத் தடுமாறக் கூடும்; அதனால் ஊக்கம் குறைந்துவிடும் என்ற எண்ணமே திருத்தத்தைச் செய்யத் தூண்டியது.

3. நூல் கூறும் பொருள்

சுவாமிநாதம் ஒரு ஐந்தமிழ் இலக்கண நூல். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து வகையாகப் பிரித்துக்கொண்டு ஆராய்கிறது. ஒவ்வொரு இயலும் மூன்று மூன்று இயல்களாகப் பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளது. நூலின் முற்பகுதியில் நூல்வழி என்ற தலைப்பில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என்ற இரண்டும் விளக்கப்படுகிறது.

எழுத்ததிகாரம் எழுத்தாக்கமரபு, பதமரபு, புணர்ச்சி மரபு என்ற மூன்று பிரிவுகளை உடையது. பெயர், எண், முறை, பிறப்பு, வடிவம், அளவு, முதனிலை, இறுதி நிலை, இடைநிலை, (மெய்ம்மயக்கம்), போலி, பதம், புணர்ச்சி என்று பன்னிரண்டாக வகைப்படுத்தி அவற்றில் முதல் பத்து வகையையும் எழுத்தாக்க மரபு பேசுகின்றது. பதவியல் என்பது பகுபதம், பகாப்பதம் என்பவற்றை விளக்கி வினைப்பகுதி, விகுதிகள், இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகியவற்றைப் பேசுகிறது. புணர்ச்சியின் பொது இலக்கணத்தைக் கூறி முப்பத்தொரு புணர்ச்சி விதிகளையும் தொகுத்து விளக்கிவிட்டு இறுதியில் வடமொழி - தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கி தமிழாக்க விதிகளையும் புணர்ச்சி மரபு பேசுகிறது.

சொல்லதிகாரம் பெயர்மரபு, வினை மரபு, எச்சமரபு என்ற மூன்று பிரிவுகளை உடையது. சொல்லின் பொது