XLii
ஐகாரம்
மொழி முதலிலும் இறுதியில் 1லு
மாத்திரையும் மொழியின்
இடையில் 1 மாத்திரையும் உடையது என்று கூறியது ஐகாரத்தின் உச்சரிப்பை
அதாவது மொழி முதலிலும் இறுதியிலும் ‘அய்’ என்றும் நடுவில் ‘அ’ என்றும்
உச்சரிக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.
எழுத்தியல்:
உயிரளபெடையைச்
சார்பெழுத்தாகக் கூறினும் அதற்குத் தனியே
மாத்திரை கூறவில்லை. இது உயிரளபெடை எழுத்தியலில் இரண்டு
உயிர்களின் சேர்க்கையாக அவர் கருதுகிறார் என்பதைக் காட்டுவதாகக்
கொள்ளலாம். இதை மொழியியல் வளர்ச்சியாகக் கருத முடியாது. எனினும்
இது தமிழ்மொழி அமைப்பில் அவருடைய கருத்தாகக் கொள்ளத் தக்கது.
தமிழ் எழுத்துக்களில் 104 எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரும்
என்று மிகுதியான எண்ணிக்கையை இவரே குறிப்பிட்டுள்ளார். இதில் இவர்
புதுமையாகக் குறிப்பிட்டது ஞகர மெய் ஆறு உயிர்களோடு கூடி மொழிக்கு
முதலில் வரும் என்பதுதான். தொல்காப்பியர் ஞகர மெய் மூன்று உயிரோடும்
(ஆ, எ, ஒ) கூடி மொழிக்கு முதலில் வரும் என்றும் (தொல். 64)
வீரசோழியரும் (வீரசோ. 7) நன்னூலாரும் (நன். 105) நான்கு உயிரோடும்
(அ, ஆ, எ, ஒ) கூடி மொழிக்கு முதலில் வரும் என்றும் கூற சாமிகவிராயர்
ஆறு உயிரோடு (அ, ஆ, இ, எ, ஏ, ஒ) மொழிக்கு முதலில் வரும் என்று
வரையறுத்துள்ளார். இவற்றில் இகரத்தோடு ஞகரம் மொழிக்கு முதலில்
வருவது சங்க காலத்திலேயே வழக்கு ஏற்பட்டுவிட்டது (ஞிமிறு-புறம். 93.12)
ஆயினும் பிற்கால ஆசிரியர்கள் அவ் வழக்கிற்கு இலக்கணத்தில் இடம்
கொடுக்காது விட்டு விட்டனர். சாமிகவிராயர் முதன்முதலில் இந்த வழக்கையும்
ஞிமிர் என்ற பிற்கால வழக்கையும் மனதில்
|