பதிப்பு முன்னுரை p06
ஐகாரத்தை எழுதும் முறைபற்றியும், ஒலிக்கும் முறை பற்றியும் அவர் விளக்கியிருப்பது நுட்பமாகப் பாராட்டத்தக்கதாகும்.
ழுஊகாரத்து இரண்டாம் எழுத்துஎனத் துவக்கி
வலத்தில் நீட்டாது வளைத்துஇடங் கொணர்ந்து
கீழுற இருதரம் மேல்நோக்கி வளைத்தல்
ஐகாரம்; நுனிநா அடிப்பல் உட்புறத்து
ஒன்றத் துருத்தியில் உயர்ந்துகீழ் அடங்கி
ஒலிக்கும் என்பது உணர்ந்தோர் இயல்பேழு
-1:11
இவ்வாறே பிற இலக்கண நூல்களில் காணப்படாத நுண்ணிய செய்திகளையும் ஒவ்வோர் இயலிலும் விளக்கியிருப்பது நினைந்து நினைந்து மகிழ்தற்குரியதாம்.
சுவாமிகளின் தமிழ்ப்பற்றுக்கு அளவில்லை. தமிழறியாத் தெய்வம் ஒன்று இருந்தால் அது பேயைவிடத் தாழ்ந்தது என்று துணிந்து கூறுகிறார்.
தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதுஎனில்
அஃதுஉணர் அலகையில் தாழ்வுஎனல் அறமே
-6:30
இந்நூற்பாவுக்கு இவ்வுரையாசிரியர் தரும் விளக்கம் ஒன்றே அவர்தம் புலமையை வியப்பதற்குப் போதுமானதாகும்.
ழுதமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் இலது என்பதே உண்மை; அதனால்தான் உளது எனில் என்றார். முன் நூற்பாவில் தமிழறிவற்ற வேந்தனைத் தாழ்த்திக்கூறிய இவர் இதில் தெய்வத்திற்கே தமிழுணர்ச்சி இல்லாதிருக்குமானால் அது பேயைவிட இழிந்ததே எனக் கூறுகிறார். இந் நூலாசிரியரின் தாய்மொழிப்பற்று இவற்றால் குன்றிலிட்ட விளக்காய் வெளிப்படுகிறது.
ழுதமிழ்மொழி, தன்னை நன்கு கற்றால் மனிதர்களையே தேவர்களின் தேவராகச் செய்துவிடும் என்பார் இவர்.