பதிப்பு முன்னுரை p18
சிற்சில வேறுபாடுகளை மாத்திரம் பெற்று விளங்கும் ஒரு வழிநூலாகாமை தௌ¤வு. வேறு இலக்கண நூல்களிலிருந்து ஒரே ஒரு நூற்பாக்கூட எடுத்து இவரால் தம் நூலுள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது கருதத்தக்கது. எனவே தான் பொதுப்பாயிரத்தில். ழுஇவ்விலக்கண நூல் முன்னோர் மொழியைப் பெருக்கிக் குறுக்கி மொழிவதன்றேழு எனத் துணிவாகக் கூற இயலுகிறது. இவ்வறுவகை இலக்கணம் இலக்கியம் படைக்க விழைபவர்களுக்கு ஏற்ற கருவியாக விளங்கவேண்டும் என்னும் கருத்திலேயே யாக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது நூலின் பல பகுதிகளால் விளங்குகிறது. இதனால் தான் போலும் சிறப்புப்பாயிரத்தில் இந் நூலாசிரியர் ழுகவிராசர் செல்வம் ஆகும் நவநூல்ழு என்கிறார். இந் நூல்கால இடையீட்டால் மொழியிலும் இலக்கணச் சிந்தனைகளிலும் நேர்ந்துள்ள மாற்றங்களைப் பதிவுசெய்து காட்டுகின்ற ஒரு பதிவேடு எனில் அமையும்.
நூலின் அறிமுகத்தை இத்துடன் முடித்துக்கொண்டு அடுத்து நூலாசிரியரைப் பற்றி இன்றியமையாத சிலவற்றைச் சிந்திப்போம்.
வண்ணச்சரபர் வரலாறு
இந்நூலாசிரியராகிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் காலம் இடம் பற்றி ஆய்ந்து கூறவேண்டிய அவசியமில்லை. தாமே தம் தன்வரலாறாகிய ழுகுருபரதத்துவழு நூலில், ழுஆறினில் கேது; ஏழிடத்தினில் உடுபதி; எட்டில் வாதிடும் குரவர் இருவரும்; நவத்தில் மால்சனி எல்லவன் குளிகன்; தீதில்நாள் அத்தம்; திதிதச மியதாம்; தினம்திரம்; தேதிபன்னாறே,ழு ழுமாதமும் கரும்பாம்பு உறையுளும் தோன்றும்ழு ழுயான் வந்ததாம் மீன இலக்கினம்;ழு; ழுவயங்கும் அங்கிசத்து லக்கினம் வில்;ழு; ழுகலி நாலாயிரத் தொன்பான் நூற்றின் நாற்பத்தினொன்று ஆண்டேழு 1 என விளக்கமாகக் கூறுகிறார். இக் காலக்குறிப்புகளிலிருந்து இவர் 22.11.1839 அன்று (விகாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் பதினாறாம் நாள் சனிக்கிழமை,)

1.
குருபர தத்துவம்-பிரயோக வினோதச் சருக்கம் 6. 7, 8,