படையற்பா
பழமை புடைத்துப் புதுமை தூற்றி
முழுமை கொள்ளச்
சமையல் செய்த
தமிழ்நூல் என்னுமிவ்
விலக்கண உணாவை
உலகம் முழுதும்
உறையும்
தமிழர்க்
கமையப் படையல்செய் வேனே
கடமைப்பா
குடும்பச் சுமையைத் தாங்கிக் கொள்ளும்ம்ம்
தந்தைதங் கையனார்
தாய்பா லாயி
வாழ்க்கை சிக்கல்
வலைப்படா தோம்பும்
மனைவி சுசீலை
எனது
பிறப்பின்
கடமையைப் பெருக்குவர் நன்றே.
கிழமைப்பா
சீராரும் தஞ்சைசோம சுந்தரனார் பள்ளிக்கும்
வீ. ரா. உ.
பள்ளியெனும் வீறுயர்ந்த பள்ளிக்கும்
வீயாத் தமிழ்த்திறம்
மீட்கும் திருப்பணியில்
ஓயாப்பேர் மெய்த்த
கரந்தைக்கல் லூரிக்கும்
நூல்வழியே ஈர்த்த
நுவலரியார் தம்முளும் தன்
கோல்வழியே என்னைக்
கொளுவிவழி காட்டும்
மொழித்துறை
முன்னோடி; முன்னில்லாப் பாங்கால்
முழுமைத் துரோணர்;ஞா.
தேவநேய னார்க்கும்
கிழமையுடை யேனயான்
கிளர்ந்து.
நன்றிப்பா
குடந்தையில் பாரதிப்பேர் கொண்டஅச்ச கத்தின்
உடந்தைமே னேயர்
கணேசன்-கிடந்தலைந்(து)
அச்சுறுத்திக்
கொண்டிருந்த நூலைப் பொருட்பேணி
அச்சுறுத்தித்
தந்தார் அவர்.
|