தொடக்கம் |
பொருநர் ஆற்றுப்படை சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியது. | |
பொருநனை விளித்தல் | |
அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர், | |
சாறு கழி வழி நாள், சோறு நசை உறாது, | |
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந! | |
| |
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்; |
|
விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை, | 5 |
எய்யா இளஞ் சூல் செய்யோள் அவ் வயிற்று | |
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல, | |
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை; | |
அளை வாழ் அலவன் கண் கண்டன்ன, | |
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி; | 10 |
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி, | |
அண் நா இல்லா அமை வரு வறு வாய்; | |
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்; | |
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்; | |
கண்கூடு இருக்கைத் திண் பிணித் திவவின்; | 15 |
ஆய் தினையரிசி அவையல் அன்ன | |
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் | |
கேள்வி போகிய நீள் விசித் தொடையல்; | |
மணம் கமழ் மாதரை மண்ணியன்ன, | |
அணங்கு மெய்ந் நின்ற அமை வரு, காட்சி; | 20 |
ஆறு அலை கள்வர் படை விட அருளின் | |
மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை | |
| |
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும், |
|
சீருடை நன் மொழி நீரொடு
சிதறி | |
| |
அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல், |
25 |
கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண், | |
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய், | |
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல், | |
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன | |
பூங் குழை ஊசற் பொறை சால் காதின், | 30 |
நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தின், | |
ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை, | |
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல், | |
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர், | |
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து, | 35 |
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை, | |
நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ், | |
உண்டு என உணரா உயவும் நடுவின், | |
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல், | |
இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின், | 40 |
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப | |
வருந்து நாய் நாவின், பெருந் தகு சீறடி, | |
அரக்கு உருக்கு அன்ன செந் நிலன் ஒதுங்கலின், | |
பரல் பகை உழந்த நோயொடு சிவணி, | |
மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் | 45 |
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின், | |
பெடை மயில் உருவின், பெருந் தகு பாடினி | |
|
|
பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும் |
|
களிறு வழங்கு அதர கானத்து அல்கி, | |
இலை இல் மராஅத்த, எவ்வம் தாங்கி, | 50 |
வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில், | |
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை | |
|
|
பீடு கெழு திருவின், பெரும் பெயர், நோன் தாள், |
|
முரசு முழங்கு தானை, மூவரும் கூடி | |
அரசவை இருந்த தோற்றம் போல | 55 |
பாடல் பற்றிய பயனுடை எழாஅல் | |
கோடியர் தலைவ! கொண்டது அறிந! | |
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது, | |
ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே; | |
போற்றிக் கேண்மதி, புகழ்
மேம்படுந! | 60 |
| |
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு |
|
நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று | |
எழுமதி; வாழி, ஏழின் கிழவ! | |
பழுமரம் உள்ளிய பறவையின், யானும், அவன் | |
இழுமென் சும்மை இடனுடை வரைப்பின், | 65 |
நசையுநர்த் தடையா நன் பெரு வாயில் | |
இசையேன் புக்கு, என் இடும்பை தீர, | |
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி, | |
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப, | |
கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி | 70 |
இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப, விரி கதிர் | |
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல், | |
ஒன்று யான் பெட்டா
அளவையின் | |
| |
|
|
கேளிர் போல, கேள் கொளல் வேண்டி, |
|
வேளாண் வாயில் வேட்பக் கூறி, |
75 |
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ, |
|
பருகு அன்ன அருகா நோக்கமோடு, |
|
உருகுபவை போல் என்பு, குளிர் கொளீஇ, |
|
ஈரும் பேனும் இருந்து இறைகூடி, |
|
வேரொடு நனைந்து, வேற்று இழை நுழைந்த |
80 |
துன்னல் சிதாஅர் துவர நீக்கி, |
|
நோக்கு நுழைகல்லா நுண்மைய, பூக் கனிந்து |
|
அரவு உரி அன்ன, அறுவை நல்கி, |
|
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து, |
|
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர், |
85 |
போக்கு இல் பொலங் கலம் நிறைய, பல் கால், |
|
வாக்குபு தரத்தர, வருத்தம் வீட, |
|
ஆர உண்டு, பேர் அஞர் போக்கி, |
|
செருக்கொடு நின்ற காலை, | |
|
|
மற்று அவன் |
|
திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி, | 90 |
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது | |
அதன் பயம் எய்திய அளவை மான, | |
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி, | |
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் | |
மனம் கவல்பு இன்றி, மாழாந்து
எழுந்து, | 95 |
| |
மாலை அன்னது ஓர் புன்மையும், காலைக் |
|
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும், | |
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப, | |
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப, | |
கல்லா இளைஞர் சொல்லிக்
காட்ட, | 100 |
| |
கதுமெனக் கரைந்து, 'வம்' எனக் கூஉய், |
|
அதன் முறை கழிப்பிய பின்றை, பதன்
அறிந்து, | |
| |
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் |
|
பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி, | |
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங் குறை | 105 |
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி, | |
அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய | |
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ, | |
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் | |
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க, | 110 |
மகிழ்ப் பதம் பல் நாள் கழிப்பி, ஒரு நாள், | |
'அவிழ்ப் பதம் கொள்க' என்று இரப்ப, முகிழ்த் தகை | |
முரவை போகிய முரியா அரிசி | |
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல், | |
பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப | 115 |
அயின்ற காலை, பயின்று இனிது இருந்து, | |
கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே | |
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி, | |
உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண்
முனிந்து, | |
|
|
ஒரு நாள், |
|
'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய | 120 |
செல்வ! சேறும், எம் தொல் பதிப் பெயர்ந்து' என, | |
மெல்லெனக் கிளந்தனம்
ஆக, | |
|
|
'வல்லே |
|
அகறிரோ எம் ஆயம் விட்டு?' என, | |
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு, | |
'துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு | 125 |
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!' என, | |
தன் அறி அளவையின் தரத்தர, யானும் | |
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு, | |
இன்மை தீர வந்தனென். | |
| |
வென் வேல் |
|
உருவப் பல் தேர் இளையோன் சிறுவன், | 130 |
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில், | |
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி, | |
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப, | |
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப, | |
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, | 135 |
வெவ் வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு, | |
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன் | |
நாடு செகிற்கொண்டு நாள்தொறும்
வளர்ப்ப, | |
| |
ஆளி நல் மான் அணங்குடைக் குருளை |
|
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி | 140 |
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென, | |
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு, | |
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை | |
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும், | |
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த | 145 |
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய, | |
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள், | |
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன் | |
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித் | |
தொழுது முன் நிற்குவிர்
ஆயின், | 150 |
| |
பழுது இன்று, |
|
ஈற்று ஆ விருப்பின், போற்றுபு நோக்கி, நும் | |
கையது கேளா அளவை, ஒய்யென, | |
பாசி வேரின் மாசொடு குறைந்த | |
துன்னல் சிதாஅர் நீக்கி, தூய | |
கொட்டைக் கரைய பட்டு உடை நல்கி, | 155 |
'பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க' என, | |
பூக் கமழ் தேறல் வாக்குபு தரத்தர, | |
வைகல் வைகல் கை கவி பருகி, | |
எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை | |
சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி, | 160 |
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை | |
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய, | |
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந் தேர் | |
ஊட்டு உளை துயல்வர, ஓரி நுடங்க, | |
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி, | 165 |
காலின் ஏழ் அடிப் பின் சென்று, 'கேலின் | |
தாறு களைந்து, ஏறு' என்று ஏற்றி, வீறு பெறு | |
பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, நீர் வாய்த் | |
தண் பணை தழீஇய தளரா இருக்கை | |
நன் பல் ஊர நாட்டொடு, நன் பல், | 170 |
வெரூஉப் பறை நுவலும், பரூஉப் பெருந் தடக் கை, | |
வெருவரு செலவின், வெகுளி வேழம் | |
தரவிடைத் தங்கல் ஓவிலனே: வரவிடைப் | |
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி, தெற்றென, | |
செலவு கடைக்கூட்டுதிர்ஆயின், பல புலந்து, | 175 |
நில்லா உலகத்து நிலைமை தூக்கி, | |
'செல்க' என விடுக்குவன்
அல்லன் | |
| |
ஒல்லெனத் |
|
திரை பிறழிய இரும் பௌவத்துக் | |
கரை சூழ்ந்த அகன் கிடக்கை, | |
மா மாவின் வயின் வயின் நெல், | 180 |
தாழ் தாழைத் தண் தண்டலை, | |
கூடு கெழீஇய, குடிவயினான், | |
செஞ் சோற்ற பலி மாந்திய | |
கருங் காக்கை கவர்வு முனையின், | |
மனை நொச்சி நிழல் ஆங்கண், | 185 |
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்; | |
இளையோர் வண்டல் அயரவும்; முதியோர் | |
அவை புகு பொழுதில் தம் பகை முரண் சொலவும் | |
முடக் காஞ்சிச் செம் மருதின், | |
மடக் கண்ண மயில் ஆல, | 190 |
பைம் பாகற் பழம், துணரிய | |
செஞ் சுளைய கனி, மாந்தி; | |
அறைக் கரும்பின் அரி நெல்லின் | |
இனக் களமர் இசை பெருக, | |
வறள் அடும்பின் இவர் பகன்றைத் | 195 |
தளிர்ப் புன்கின் தாழ் காவின் | |
நனை ஞாழலொடு மரம் குழீஇய | |
அவண் முனையின், அகன்று மாறி, | |
அவிழ் தளவின் அகன் தோன்றி, | |
நகு முல்லை, உகு தேறு வீ, | 200 |
பொன் கொன்றை, மணிக் காயா, | |
நல் புறவின் நடை முனையின், | |
சுற வழங்கும் இரும் பௌவத்து | |
இறவு அருந்திய இன நாரை | |
பூம் புன்னைச் சினைச் சேப்பின், | 205 |
ஓங்கு திரை ஒலி வெரீஇ, | |
தீம் பெண்ணை மடல் சேப்பவும்; | |
கோட் தெங்கின், குலை வாழை, | |
கொழுங் காந்தள், மலர் நாகத்து, | |
துடிக் குடிஞை, குடிப் பாக்கத்து, | 210 |
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப, | |
கலவம் விரித்த மட மஞ்ஞை | |
நிலவு எக்கர்ப் பல
பெயர; | |
| |
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் |
|
மீன் நெய்யொடு நறவு மறுகவும்; | 215 |
தீங் கரும்போடு அவல் வகுத்தோர் | |
மான் குறையொடு மது மறுகவும்; | |
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல் | |
நறும் பூங் கண்ணி குறவர் சூட; | |
கானவர் மருதம் பாட, அகவர் | 220 |
நீல் நிற முல்லைப் பல் திணை நுவல; | |
கானக் கோழி கதிர் குத்த, | |
மனைக் கோழி தினைக் கவர; | |
வரை மந்தி கழி மூழ்க, | |
கழி நாரை வரை இறுப்ப; | 225 |
தண் வைப்பின் நால் நாடு குழீஇ, | |
மண் மருங்கினான் மறு இன்றி, | |
ஒரு குடையான் ஒன்று கூற, | |
பெரிது ஆண்ட பெருங் கேண்மை, | |
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல், | 230 |
அன்னோன் வாழி, வென் வேல் குருசில்! | |
| |
மன்னர் நடுங்கத் தோன்றி, பல் மாண் |
|
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி, | |
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும், | |
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக் | 235 |
கருவி வானம் கடற்கோள் மறப்பவும், | |
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் | |
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும், | |
துறைதுறைதோறும், பொறை உயிர்த்து ஒழுகி, | |
நுரைத்தலைக்குரைப்புனல்வரைப்புஅகம்புகுதொறும், | 240 |
புனல் ஆடு மகளிர் கதுமெனக்
குடைய | |
| |
கூனி, குயத்தின் வாய் நெல் அரிந்து, |
|
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும், | |
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை | |
கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும், | 245 |
சாலி நெல்லின், சிறை கொள் வேலி, | |
ஆயிரம் விளையுட்டு ஆக, | |
காவிரி புரக்கும் நாடு கிழவோனே. | |
இதன் பொருள் | |
| |
| |
தனிப் பாடல்கள் |
|
ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு |
|
வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின், | |
அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும் | |
கரிகாலன் காவிரி சூழ் நாடு. | 1 |
அரிமா சுமந்த அமளி மேலானைத் |
|
திருமாவளவன் எனத் தேறேன்; - திரு மார்பின் | |
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப் | |
போனவா பெய்த வளை! | 2 |
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால் |
|
இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய் | |
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன் | |
கரிகாலன் கால் நெருப்பு உற்று. | 3 |