முகப்பு |
ஆடு (புருவை, துரு, மறி) |
47. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி |
||
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது, |
||
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப் |
||
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென |
||
5 |
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் |
|
கானக நாடற்கு, 'இது என' யான் அது |
||
கூறின் எவனோ-தோழி! வேறு உணர்ந்து, |
||
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி, |
||
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து, |
||
10 |
அன்னை அயரும் முருகு நின் |
|
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே? | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்வெள்ளியார்
|
192. குறிஞ்சி |
'குருதி வேட்கை உரு கெழு வய மான் |
||
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
||
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
||
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
||
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, |
||
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
||
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
||
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
||
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
||
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. | உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
321. முல்லை |
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை |
||
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர, |
||
கான முல்லைக் கய வாய் அலரி |
||
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய, |
||
5 |
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, |
|
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல |
||
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை? |
||
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக, |
||
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற, |
||
10 |
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. | உரை |
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|