முகப்பு |
அம்ம வாழி தோழி யாவதும் |
77. பாலை |
அம்ம வாழி, தோழி!-யாவதும், |
||
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து |
||
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை |
||
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் |
||
அரிய கானம் சென்றோர்க்கு |
||
எளிய ஆகிய தட மென் தோளே. |
உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |