முகப்பு |
உறுவளி உளரிய |
278. பாலை |
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து |
||
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச் |
||
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார் |
||
கொடியர் வாழி-தோழி!-கடுவன் |
||
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து, |
||
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும் |
||
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன் |