யானே ஈண்டையேனே...ஆனா

97. நெய்தல்
யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே.
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகி மன்றத்தஃதே.

உரை

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வெண்பூதி