முகப்பு |
கண்டிசின் பாண |
359. மருதம் |
கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம: |
||
மாலை விரிந்த பசு வெண் நிலவின் |
||
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை, |
||
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ, |
||
புதல்வற் தழீஇயினன் விறலவன்; |
||
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே. |
உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு தோழி, பாணற்குச் சொல்லியது. - பேயன். |