முகப்பு |
வெந்திறல் கடுவளி |
39. பாலை |
'வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென, |
||
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் |
||
மலையுடை, அருஞ் சுரம்' என்ப-நம் |
||
முலையிடை முனிநர் சென்ற ஆறே. | உரை | |
பிரிவிடை 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்கு, 'யாங்ஙனம் ஆற்றுவேன்?' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார் |