காமம் காமம் என்ப...நுணங்கி

136. குறிஞ்சி
'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.

உரை

தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்