காலை எழுந்து கடுந்தேர்

45. மருதம்
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி,
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன், 'எல்லினன் பெரிது' என,
மறுவரும் சிறுவன் தாயே;
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.

உரை

தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது.- ஆலங்குடி வங்கனார்