முகப்பு |
தேற்றாம் அன்றே |
398. பாலை |
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத் |
||
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை, |
||
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர் |
||
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய |
||
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை, |
||
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு, |
||
மெய்ம் மலி உவகையின் எழுதரு |
||
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே. | உரை | |
பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. - பாலை ப |