முகப்பு |
நீர் கால்யாத்த |
388. குறிஞ்சி |
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை |
||
கோடை ஒற்றினும் வாடாதாகும்; |
||
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ |
||
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன |
||
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், |
||
யானை கைம்மடித்து உயவும் |
||
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே. | உரை | |
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார் |