முகப்பு |
நெடுவரை மருங்கில் |
158. குறிஞ்சி |
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் |
||
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக் |
||
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை! |
||
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை |
||
இமயமும் துளக்கும் பண்பினை; |
||
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே? | உரை | |
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- ஒளவையார். |