முகப்பு |
புல்வீழ் இற்றிக் கல்இவர் |
106. குறிஞ்சி |
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் |
|
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் |
|
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின் |
|
வந்தன்று-வாழி, தோழி!-நாமும் |
|
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு, |
|
'தான் மணந்தனையம்' என விடுகம் தூதே. |
|
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது. - கபிலர் |