முகப்பு |
புள்ளும் மாவும் |
118. நெய்தல் |
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய |
||
நள்ளென வந்த நார் இல் மாலை, |
||
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர், |
||
'வருவீர் உளீரோ?' எனவும், |
||
வாரார்-தோழி!-நம் காதலோரே. | உரை | |
வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.- நன்னாகையார் |