முகப்பு |
பெய்த குன்றத்துப் |
200. நெய்தல் |
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ் |
||
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து, |
||
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!- |
||
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே- |
||
கால மாரி மாலை மா மலை |
||
இன் இசை உருமினம் முரலும் |
||
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே. | ||
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, 'பருவம் அன்று; வம்பு'என்ற வழி, தலைமகள் சொல்லியது. - ஒளவையார். |