முகப்பு |
பெருங்கடற் கரையது...நீத்துநீர் |
313. நெய்தல் |
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை |
||
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு, |
||
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு |
||
யாத்தேம்; யாத்தன்று நட்பே; |
||
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே. | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, 'பண்பிலர்' என்று இயற்பழித்த தோழிக்கு, 'அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!' என்று,சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட |