முகப்பு |
பொன்நேர் ஆவிரைப் |
173. குறிஞ்சி |
பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த |
||
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப் |
||
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு, |
||
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப, |
||
'இன்னள் செய்தது இது' என, முன் நின்று, |
||
அவள் பழி நுவலும், இவ் ஊர்; |
||
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே. |
உரை | |
குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது. - மதுரைக் காஞ்சிப் புலவன் |