முகப்பு |
வாழை |
308. குறிஞ்சி |
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய |
||
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து, |
||
மயங்குதுயர் உற்ற மையல் வேழம் |
||
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, |
||
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் |
||
மா மலைநாடன் கேண்மை |
||
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே. |
உரை | |
வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன் |
327. குறிஞ்சி |
'நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின் |
||
நயன் இலர் ஆகுதல் நன்று' என உணர்ந்த |
||
குன்ற நாடன்தன்னினும், நன்றும் |
||
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி! |
||
நம் மனை மட மகள், 'இன்ன மென்மைச் |
||
சாயலள்; அளியள்' என்னாய், |
||
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே. |
உரை | |
கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |