முகப்பு |
மிளகு (கறி) |
90. குறிஞ்சி |
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு |
||
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய |
||
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் |
||
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, |
||
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் |
||
குன்ற நாடன் கேண்மை |
||
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் |
288. குறிஞ்சி |
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து |
||
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன் |
||
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற |
||
இன்னாமையினும், இனிதோ- |
||
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே? |
உரை | |
தலைமகனது வரவுணர்ந்து, 'நம்பெருமான் நமக்கு அன்பிலன்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர் |