முகப்பு |
ஈங்கை |
110. முல்லை |
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு |
||
யார் ஆகியரோ-தோழி!-நீர |
||
நீலப் பைம் போது உளரி, புதல |
||
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி, |
||
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த |
||
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று |
||
இன்னாது எறிதரும் வாடையொடு |
||
என் ஆயினள்கொல் என்னாதோரே? |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலங் கிழார் |
380. பாலை |
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர் |
||
வென்று எறி முரசின் நன் பல முழங்கி, |
||
பெயல் ஆனாதே, வானம்; காதலர் |
||
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே; |
||
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய |
||
வண்ணத் துய்மலர் உதிர |
||
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே! |
உரை | |
பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், 'கதுமென ஆற்றுவிப்பது அரிது' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்ற |