முகப்பு |
கூகை |
153. குறிஞ்சி |
குன்றக் கூகை குழறினும், முன்றிற் |
||
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும், |
||
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே, |
||
ஆர் இருட் கங்குல் அவர்வயின் |
||
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர் |
393. மருதம் |
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் |
||
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே, |
||
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் |
||
பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன் |
||
களிறொடு பட்ட ஞான்றை, |
||
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே |
உரை | |
தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.- பரணர் |