ஆண்குரங்கை இழந்த பெண் குரங்கு இறத்தல்.


69. குறிஞ்சி

கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென,

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,

ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்

சாரல் நாட! நடு நாள்

உரை

வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!

தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன்