71-80 |
71 |
சூது ஆர் குறுந் தொடிச் சூர் அமை நுடக்கத்து |
|
நின் வெங் காதலி தழீஇ, நெருநை |
|
ஆடினை என்ப, புனலே; அலரே |
|
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந? |
|
5 |
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே? |
பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டுப் புலந்த தலைமகள் தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது. 1 |
72 |
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத் |
|
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல், |
|
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல் |
|
மலர் ஆர் மலிர்நிறை வந்தென, |
|
5 |
புனல் ஆடு புணர்துணை ஆயினள், எமக்கே. |
தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைமகன் களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. 2 |
73 |
வண்ண ஒண் தழை நுடங்க, வால் இழை |
|
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தென, |
|
கள் நறுங் குவளை நாறித் |
|
தண்ணென்றிசினே பெருந் துறைப் புனலே. |
|
இதுவும் அது. 3 |
74 |
விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே |
|
பசும் பொன் அவிர் இழை பைய நிழற்ற, |
|
கரை சேர் மருதம் ஏறிப் |
|
பண்ணை பாய்வோள் தண் நறுங் கதுப்பே. |
|
இதுவும் அது. 4 |
75 |
பலர் இவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால், |
|
அலர் தொடங்கின்றால் ஊரே மலர |
|
தொல் நிலை மருதத்துப் பெருந் துறை, |
|
நின்னோடு ஆடினள், தண் புனல் அதுவே. |
|
பரத்தையோடு புனலாடி வந்த தலைமகன் அதனை மறைத்துக் கூறியவழித் தோழி கூறியது. 5 |
76 |
பைஞ்சாய்க் கூந்தல், பசு மலர்ச் சுணங்கின் |
|
தண் புனலாடி, தன் நலம் மேம்பட்டனள் |
|
ஒண் தொடி மடவரல், நின்னோடு, |
|
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. |
|
இதுவும் அது. 6 |
77 |
அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்: |
|
பேர் ஊர் அலர் எழ, நீர் அலைக் கலங்கி, |
|
நின்னொடு தண் புனல் ஆடுதும்; |
|
எம்மொடு சென்மோ; செல்லல், நின் மனையே. |
|
முன் ஒரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக்கேட்டு, ' இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, ' புதுப்புனல் ஆடப் போது' என்ற தலைமகற்குச் சொல்லியது. 7 |
78 |
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி |
|
மதில் கொல் யானையின், கதழ்பு, நெறி வந்த, |
|
சிறை அழி புதுப்புனல் ஆடுகம்; |
|
எம்மொடு கொண்மோ, எம் தோள் புரை புணையே. |
|
இதுவும் அது. 8 |
79 |
'புதுப் புனல் ஆடி அமர்த்த கண்ணள், |
|
யார் மகள், இவள்?' எனப் பற்றிய மகிழ்ந! |
|
யார் மகளாயினும் அறியாய்; |
|
நீ யார் மகனை, எம் பற்றியோயே? |
|
தன்னோடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக் கேட்டு, தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றி |
80 |
புலக்குவெம் அல்லேம்; பொய்யாது உரைமோ: |
|
நலத்தகு மகளிர்க்குத் தோள் துணை ஆகி, |
|
தலைப் பெயல் செம் புனல் ஆடித் |
|
தவ நனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே. |
|
தன்னை ஒழியப் புதுப்புனலாடித் தாழ்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10 |