251-260 |
251 |
குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி |
|
நுண் பல் அழி துளி பொழியும் நாட! |
|
நெடு வரைப் படப்பை நும் ஊர்க் |
|
கடு வரல் அருவி காணினும் அழுமே. |
|
வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1 |
252 |
குன்றக் குறவன் புல் வேய் குரம்பை |
|
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் |
|
புரையோன் வாழி, தோழி! விரை பெயல் |
|
அரும் பனி அளைஇய கூதிர்ப் |
|
5 |
பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே. |
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்துக்கு முன்னே வந்தானாக, உவந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 2 |
253 |
குன்றக் குறவன் சாந்த நறும் புகை |
|
தேம் கமழ் சிலம்பின் வரையகம் கமழும் |
|
கானக நாடன் வரையின், |
|
மன்றலும் உடையள்கொல் தோழி! யாயே? |
|
'வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவொடு புகுதராநின்றான்' என்பது தோழி கூறக் கேட்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 3 |
254 |
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென, |
|
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் |
|
வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள்! |
|
கொண்டனர், செல்வர் தம் குன்று கெழு நாட்டே. |
|
உடன்போக்கு உடன்பட வேண்டிய தோழி தலைமகட்குச் சொல்லியது. 4 |
255 |
குன்றக் குறவன் காதல் மட மகள் |
|
வரையர மகளிர்ப் புரையும் சாயலள்; |
|
ஐயள்; அரும்பிய முலையள்; |
|
செய்ய வாயினள்; மார்பினள், சுணங்கே. |
|
'நின்னால் காணப்பட்டவள் எத்தன்மையள்?' என்ற பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 5 |
256 |
குன்றக் குறவன் காதல் மட மகள் |
|
வண்டு படு கூந்தல் தண் தழைக் கொடிச்சி; |
|
வளையள்; முளை வாள் எயிற்றள்; |
|
இளையள் ஆயினும், ஆர் அணங்கினளே. |
|
'நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தாள் அல்லள்' என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 6 |
257 |
குன்றக் குறவன் கடவுள் பேணி, |
|
இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள் |
|
ஆய் அரி நெடுங் கண் கலிழ, |
|
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே. |
|
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி உடன்படாது கூறியது. 7 |
258 |
குன்றக் குறவன் காதல் மட மகள் |
|
அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப் |
|
பெரு வரை நாடன் வரையும் ஆயின், |
|
கொடுத்தனெம் ஆயினோ நன்றே |
|
5 |
இன்னும் ஆனாது, நன்னுதல் துயரே. |
வரைவு வேண்டிவிட மறுத்துழித் தமர்க்கு உரைப்பாளாய், வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி, அவன் மலை காண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லியது. 8 |
259 |
குன்ற குறவன் காதல் மட மகள் |
|
மன்ற வேங்கை மலர் சில கொண்டு, |
|
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி, |
|
தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்; |
|
5 |
மலர்ந்த காந்தள் நாறிக் |
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே. |
|
வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு, 'இனி அது கடுக முடியும்' என உவந்த உள்ளத்தனாய், தன்னுள்ளே சொல்லியது. 9 |
260 |
குன்றக் குறவன் காதல் மட மகள், |
|
மென் தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல |
|
பைம் புறப் படு கிளி ஓப்பலர்; |
|
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே! |
|
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி, 'இனிப் புனங்காவற்கு வாரோம்' எனக்கூறி வரைவு கடாயது. 10 |