261-270 |
261 |
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி |
|
வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் |
|
எந்தை அறிதல் அஞ்சிக்கொல்? |
|
அதுவே மன்ற வாராமையே. |
|
அல்லகுறிப்பட்டுத் தலைமகன் நீங்கினமை அறியாதாள் போன்று தோழி, பிற்றை ஞான்று அவன் சிறைப்புறத்தானாய் நிற்ப, தலைமகட்குச் சொல்லியது. 1 |
262 |
சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி |
|
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் |
|
இலங்குமலை நாடன் வரூஉம்; |
|
மருந்தும் அறியும்கொல் தோழி! அவன் விருப்பே? |
|
'வரைந்து கொள்ள நினைக்கிலன்' என்று வேறுபட்ட தலைமகள், 'அவன் நின்மேல் விருப்பமுடையன்; நீ நோகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 2 |
263 |
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல் |
|
கட்டளை அன்ன கேழல் மாந்தும் |
|
குன்று கெழு நாடன் தானும் |
|
வந்தனன்; வந்தன்று தோழி! என் நலனே! |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், மீண்டமை அறிந்த தலைமகள், 'நீ தொலைந்த நலம் இன்று எய்திய காரணம் என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 3 |
264 |
இளம் பிறை அன்ன கோட்ட கேழல் |
|
களங்கனி அன்ன பெண்பாற் புணரும் |
|
அயம் திகழ் சிலம்ப! கண்டிகும் |
|
பயந்தன மாதோ, நீ நயந்தோள் கண்ணே! |
|
வரையாது வந்து ஒழுகும் தலைமகனைப் பகற்குறிக்கண்ணே எதிர்ப்பட்டுத் தோழி வரைவு கடாயது. 4 |
265 |
புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை |
|
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் |
|
குன்று கெழு நாடன் மறந்தனன் |
|
பொன்போல் புதல்வனோடு என் நீத்தோனே. |
|
பரத்தை இடத்தானாக ஒழுகுகின்ற தலைமகன் விடுத்த வாயில்மாக்கட்குத் தலைமகள் சொல்லியது. 5 |
266 |
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தலொடு |
|
குறுக் கை இரும் புலி பொரூஉம் நாட! |
|
நனி நாண் உடையை மன்ற |
|
பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே! |
|
நொதுமலர் வரைவு பிறந்துழி, தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறி, தலைமகனை வரைவு கடாயது. 6 |
267 |
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் |
|
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி, |
|
ஐவனம் கவரும் குன்ற நாடன் |
|
வண்டு படு கூந்தலைப் பேணி, |
|
5 |
பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே. |
'தலைமகளைத் தலைமகன் வரைவல்' எனத் தெளித்தான் என்று அவள் கூறக் கேட்ட தோழி, அவன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 7 |
268 |
தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு |
|
வள மலைச் சிறு தினை உணீஇ, கானவர் |
|
வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும் |
|
நல் மலை நாடன் பிரிதல் |
|
5 |
என் பயக்குமோ நம் விட்டுத் துறந்தே? |
'அவன் குறிப்பு இருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்தல்லது வரைய மாட்டான் போன்று இருந்தது' எனத் தலைமகள் கூறக்கேட்ட தோழி, அவட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 8 |
269 |
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை |
|
விளைந்த செறுவின் தோன்றும் நாடன் |
|
வாராது அவண் உறை நீடின் நேர் வளை |
|
இணை ஈர் ஓதி! நீ அழ |
|
5 |
துணை நனி இழக்குவென், மடமையானே. |
குறை நயப்பக் கூறி தலைமகளைக் கூட்டிய தோழி, அவன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 9 |
270 |
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் |
|
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும் |
|
புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடு வரை |
|
காணினும் கலிழும் நோய் செத்து, |
|
5 |
தாம் வந்தனர், நம் காதலோரே. |
வரைவு காரணமாக நெட்டிடை கழிந்து, பொருள்வயிற் போகிய தலைமகன் வந்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய், தலைமகட்குச் சொல்லியது. 10 |