321-330 |
321 |
உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை |
|
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப் |
|
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து, |
|
மொழிபெயர் பல் மலை இறப்பினும், |
|
5 |
ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே. |
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது. 1 |
322 |
நெடுங் கழை முளிய வேனில் நீடி, |
|
கடுங் கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின், |
|
வெய்ய ஆயின, முன்னே; இனியே, |
|
ஒள் நுதல் அரிவையை உள்ளுதொறும் |
|
5 |
தண்ணிய ஆயின, சுரத்திடை ஆறே! |
இடைச் சுரத்துக்கண் தலைமகன் தலைமகள் குணம் நினைத்தலில் தனக்கு உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது. 2 |
323 |
வள் எயிற்றுச் செந்நாய் வயவு உறு பிணவிற்குக் |
|
கள்ளிஅம் கடத்திடைக் கேழல் பார்க்கும் |
|
வெஞ் சுரக் கவலை நீந்தி, |
|
வந்த நெஞ்சம்! நீ நயந்தோள் பண்பே. |
|
இடைச் சுரத்துத் தலைமகள் குணம் நினைந்த தலைமகன், 'அவள் பண்பு வந்தன' என உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 3 |
324 |
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச் |
|
சிறிது கண்படுப்பினும், காண்குவென் மன்ற |
|
நள்ளென் கங்குல், நளி மனை நெடு நகர், |
|
வேங்கை வென்ற சுணங்கின் |
|
5 |
தேம் பாய் கூந்தல் மாஅயோளே. |
பிரிந்து வந்த தலைமகன் தலைமகளை நலம் பாராட்டக் கண்ட தோழி, 'இவள் குணத்தினை மறந்து அமைந்தவாறு யாது?' என வினாவினாட்கு அவன் சொல்லியது. 4 |
325 |
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ, |
|
போகில் புகா உண்ணாது, பிறிது புலம் படரும் |
|
வெம்பு அலை அருஞ் சுரம் நலியாது |
|
எம் வெங் காதலி பண்பு துணைப் பெற்றே. |
|
பிரிந்துவந்த தலைமகன், 'சுரத்தின் வெம்மை எங்ஙனம் ஆற்றினீர்?' என்ற தோழிக்குச் சொல்லியது. 5 |
326 |
அழல் அவிர் நனந் தலை நிழல் இடம் பெறாது, |
|
மட மான் அம் பிணை மறியொடு திரங்க, |
|
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் |
|
இன்னா மன்ற, சுரமே; |
|
5 |
இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே! |
இடைச்சுரத்து வெம்மை ஆற்றானாகிய தலைமகன் தலைமகள் குணம் நினைந்து, நொந்து சொல்லியது. 6 |
327 |
பொறி வரித் தடக் கை வேதல் அஞ்சி, |
|
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா; |
|
வெயில் முளி சோலைய, வேய் உயர் சுரனே; |
|
அன்ன ஆர் இடையானும், |
|
5 |
தண்மை செய்த, இத் தகையோள் பண்பே! |
பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தலைமகள் குணம் நினைந்து, இரங்கிச் சொல்லியது. 7 |
328 |
நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய்த் |
|
தண்ணிய ஆயினும், வெய்ய மன்ற |
|
மடவரல் இன் துணை ஒழியக் |
|
கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே. |
|
'மழை வீழ்தலால் சுரம் தண்ணென்றது; இனி வருத்தம் இன்றிப் போகலாம்' என்ற உழையர்க்குத் தலைமகன் சொல்லியது. 8 |
329 |
ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனந் தலை |
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, நம்மொடு |
|
மறுதருவதுகொல் தானே செறிதொடி |
|
கழிந்து உகு நிலைய ஆக |
|
5 |
ஒழிந்தோள் கொண்ட, என் உரம் கெழு, நெஞ்சே? |
இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து, தலைமகன் உழையர்க்குச் சொல்லியது. 9 |
330 |
வெந் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி, |
|
வந்தனம்ஆயினும், ஒழிக இனிச் செலவே! |
|
அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக் |
|
கதிர் தெறு வெஞ் சுரம் நினைக்கும், |
|
5 |
அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே. |
பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 10 |