331-340 |
331 |
அம்ம வாழி, தோழி! அவிழ் இணர்க் |
|
கருங் கால் மராஅத்து வைகு சினை வான் பூ |
|
அருஞ் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள, |
|
இனிய கமழும் வெற்பின் |
|
5 |
இன்னாது என்ப, அவர் சென்ற ஆறே. |
தலைமகன் பிரிந்துழி, 'செல்லும் வழியிடத்து மலையின் உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைத்து முடியச் செல்லார், மீள்வரோ?' எனக் கேட்ட தலைவிக்கு, 'அவர் முடியச் சென்றார்' என்பது அறிந்து, இரங்கித் தோழி கூறியது. 1 |
332 |
அம்ம வாழி, தோழி! என்னதூஉம் |
|
அறன் இல மன்ற தாமே விறல் மிசைக் |
|
குன்று கெழு கானத்த பண்பு இல் மாக் கணம், |
|
'கொடிதே காதலிப் பிரிதல்; |
|
5 |
செல்லல், ஐய! என்னாதவ்வே. |
பிரிந்த தலைமகன், 'சுரத்திடைக் கழியச் சென்றான்' என்பது கேட்ட தலைமகள் அங்குள்ள மாக்களை நொந்து, தோழிக்குச் சொல்லியது. 2 |
333 |
அம்ம வாழி, தோழி! யாவதும் |
|
வல்லா கொல்லோ தாமே அவண |
|
கல்லுடை நல் நாட்டுப் புள்ளினப் பெருந் தோடு, |
|
'யாஅம் துணை புணர்ந்து உறைதும்; |
|
5 |
யாங்குப் பிரிந்து உறைதி!' என்னாதவ்வே? |
புட்களை நொந்து சொல்லியது. 3 |
334 |
அம்ம வாழி, தோழி! சிறியிலை |
|
நெல்லி நீடிய கல் காய் கடத்திடை, |
|
பேதை நெஞ்சம் பின் செல, சென்றோர் |
|
கல்லினும் வலியர் மன்ற |
|
5 |
பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே. |
பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 |
335 |
அம்ம வாழி, தோழி! நம்வயின் |
|
நெய்த்தோர் அன்ன செவிய எருவை |
|
கற்புடை மருங்கில் கடு முடை பார்க்கும் |
|
காடு நனி கடிய என்ப |
|
5 |
நீடி இவண் வருநர் சென்ற ஆறே. |
தலைமகன் சென்ற சுரத்தினிடத்துக் கொடுமை பிறர் கூறக்கேட்ட தலைமகள் ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 5 |
336 |
அம்ம வாழி, தோழி! நம்வயின் |
|
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற |
|
நின்றது இல் பொருள் பிணி முற்றிய |
|
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே. |
|
பிரிவதற்கு முன்பு தங்களுடன் அவன் ஒழுகிய திறம் நினைந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6 |
337 |
அம்ம வாழி, தோழி! நம்வயின் |
|
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் |
|
இனிய மன்ற தாமே |
|
பனி இருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழி, தன் முயக்கினும் அவற்குப் பிற்காலத்துப் பொருள் சிறந்தது எனத் தலைவி இரங்கித் தோழிக்குச் சொல்லியது. 7 |
338 |
அம்ம வாழி, தோழி! சாரல் |
|
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் |
|
மலை உறு தீயின் சுரமுதல் தோன்றும் |
|
பிரிவு அருங் காலையும், பிரிதல் |
|
5 |
அரிது வல்லுநர் நம் காதலோரே. |
தலைமகன் பிரிந்துழி. 'இக் காலத்தே பிரிந்தார்' எனத் தலைமகள் இரங்கிச் சொல்லியது. 8 |
339 |
அம்ம வாழி, தோழி! சிறியிலைக் |
|
குறுஞ் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய |
|
வாவல் உகக்கும் மாலையும் |
|
இன்றுகொல், தோழி! அவர் சென்ற நாட்டே? |
|
தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு, ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9 |
340 |
அம்ம வாழி, தோழி! காதலர் |
|
உள்ளார்கொல்? நாம் மருள் உற்றனம்கொல்? |
|
விட்டுச் சென்றனர் நம்மே |
|
தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே. |
|
தலைமகள் பிரிந்துழி, 'கடிதின் வருவர்' என ஆற்றியிருந்த தலைவி, அவன் நீட்டித்துழி, ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 10 |