381-390 |
381 |
பைங் காய் நெல்லி பல உடன் மிசைந்து, |
|
செங் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் |
|
யார்கொல், அளியர் தாமே வார் சிறைக் |
|
குறுங் கால் மகன்றில் அன்ன |
|
5 |
உடன் புணர் கொள்கைக் காதலோரே? |
உடன்போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. 1 |
382 |
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள் வேல் |
|
திருந்து கழல் காளையொடு அருஞ் சுரம் கழிவோள், |
|
எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப் |
|
புனை இழை மகளிர்ப் பயந்த |
|
5 |
மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே. |
தலைமகள் இடைச் சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத் தங்கியவழி, அவ்வூர்ப் பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டார் சொல்லியது. 2 |
383 |
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற |
|
நெடுங் கால் மராஅத்துக் குறுஞ் சினை பற்றி, |
|
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற |
|
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே |
|
5 |
பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் |
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே. |
|
உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற் பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்க, கண்டார் கூறியது. 3 |
384 |
சேட் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்! |
|
நும் ஒன்று இரந்தனென் மொழிவல்; எம் ஊர், |
|
'யாய் நயந்து எடுத்த ஆய்நலம் கவின |
|
ஆர் இடை இறந்தனள்' என்மின் |
|
5 |
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே. |
உடன்போகிய தலைமகள் ஆண்டு எதிர்வரும் அந்தணர்க்குச் சொல்லியது. 4 |
385 |
'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி, |
|
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய, |
|
வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக் |
|
கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்! |
|
5 |
நல் தோள் நயந்து பாராட்டி, |
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே. |
|
வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5 |
386 |
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் |
|
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே |
|
நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட |
|
இடும்பை உறுவி! நின் கடுஞ் சூல் மகளே. |
|
புணர்ந்து உடன்போகிய தலைமகளை இடைச் சுரத்துக் கண்டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது. 6 |
387 |
'அறம் புரி அரு மறை நவின்ற நாவின் |
|
திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்' என்று |
|
ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே! |
|
கண்டனெம் அம்ம, சுரத்திடை அவளை |
|
5 |
இன் துணை இனிது பாராட்ட, |
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே. |
|
பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர் அவட்குச் சொல்லியது. 7 |
388 |
நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் |
|
கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ, |
|
சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப் |
|
பொன் ஏர் மேனி மடந்தையொடு |
|
5 |
வென் வேல் விடலை முன்னிய சுரனே. |
தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8 |
389 |
'செய் வினைப் பொலிந்த செறி கழல் நோன் தாள் |
|
மை அணல் காளையொடு பைய இயலி, |
|
பாவை அன்ன என் ஆய்தொடி மடந்தை |
|
சென்றனள்! என்றிர், ஐய! |
|
5 |
ஒன்றினவோ, அவள் அம் சிலம்பு அடியே! |
பின்சென்ற செவிலித்தாய், வினவப் பட்டோர் 'கண்டோம்' என்புழி, சொல்லியது. 9 |
390 |
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது |
|
பல் ஊழ் மறுகி வினவுவோயே! |
|
திண் தோள் வல்வில் காளையொடு |
|
கண்டனெம் மன்ற சுரத்திடை, யாமே. |
|
பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவ, கண்டோர் தாம் கண்டவாறு அவட்குக் கூறியது. 10 |