இரு நிலம் குளிர்ப்ப |
470 |
இரு நிலம் குளிர்ப்ப வீசி, அல்கலும் |
|
அரும் பனி அளைஇய அற்சிரக் காலை |
|
உள்ளார், காதலர், ஆயின், ஒள்ளிழை! |
|
சிறப்பொடு விளங்கிய காட்சி |
|
5 |
மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே? |
பருவம் வந்தது கண்டு, 'தாம் குறித்த இதனை மறந்தார்' என வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 10 |