தண் புனல் ஆடும் தடங் கோட்டு |
98 |
தண் புனல் ஆடும் தடங் கோட்டு எருமை |
|
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர! |
|
ஒண் தொடி மட மகள் இவளினும் |
|
நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே? |
|
புறத்தொழுக்கம் உளது ஆகிய துணையானே புலந்து வாயில் நேராத தலைமகள் கொடுமை தலைமகன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது. 8 |