தன் பார்ப்புத் தின்னும் |
41 |
'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு |
|
வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால் |
|
தன் சொல் உணர்ந்தோர் மேனி |
|
பொன் போல் செய்யும் ஊர்கிழவோனே. |
|
கழறித் தெருட்டற் பாலராகிய அகம் புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலாகிய பக்கத்தாரையும் இகழ்ந்து, தலைவி கூறியது. 1 |