ஈங்கை |
456 |
உள்ளார்கொல்லோ தோழி! வெள் இதழ்ப் |
|
பகல் மதி உருவின் பகன்றை மா மலர் |
|
வெண் கொடி ஈங்கைப் பைம் புதல் அணியும் |
|
அரும் பனி அளைஇய கூதிர் |
|
5 |
ஒருங்கு இவண் உறைதல், தெளித்து அகன்றோரே? |
குறித்த பருவம் வரவும் தலைமகன் வந்திலனாக ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6 |