பதிற்றுப் பத்துத் திரட்டு

3


வந்தனென், பெரும! கண்டனென் செலற்கே-

களிறு கலிமான் தேரொடு சுரந்து,

நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை,

மாரி என்னாய் பனி என மடியாய்

பகை வெம்மையின் அசையா ஊக்கலை   

5

வேறு புலத்து இறுத்த விறல் வெந் தானையொடு

மாறா மைந்தர் மாறு நிலை தேய,

மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து,

கடாஅ யானை முழங்கும்,

இடாஅ ஏணி நின் பாசறையானே.   

10


[புறத்திரட்டு, பாசறை. 8]


உரை



முகப்பு  
மேல்