செவ்வேள் |
5. செவ்வேள் |
| |
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு, |
|
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி, |
|
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து, |
|
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து, |
|
5 |
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய |
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை |
|
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல், |
|
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை, |
|
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து, |
|
10 |
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை! |
| |
'மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள், |
|
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை! |
|
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்! |
|
சால்வ! தலைவ!' எனப் பேஎ விழவினுள், |
|
15 |
வேலன் ஏத்தும் வெறியும் உளவே: |
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல, |
|
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்: |
|
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை; |
|
சிறப்பினுள் உயர்வு ஆகலும், |
|
20 |
பிறப்பினுள் இழிபு ஆகலும், |
ஏனோர் நின் வலத்தினதே: |
|
| |
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ, |
|
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து, |
|
நாகம் நாணா, மலை வில்லாக, |
|
25 |
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, |
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப் |
|
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் |
|
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள், |
|
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி |
|
30 |
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு, |
'விலங்கு' என, விண்ணோர் வேள்வி முதல்வன் |
|
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது |
|
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின், |
|
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு |
|
35 |
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள: |
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை |
|
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து, |
|
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர், |
|
'மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின், |
|
40 |
சாலார்; தானே தரிக்க' என, அவர் அவி |
உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித் |
|
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில், |
|
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள் |
|
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய, |
|
45 |
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்: |
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் |
|
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே; |
|
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப் |
|
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்: |
|
50 |
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, |
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன், |
|
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென, |
|
அறு வேறு துணியும் அறுவர் ஆகி, |
|
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்! |
|
| |
55 |
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய |
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய, |
|
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து, |
|
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து |
|
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து, |
|
60 |
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; |
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து, |
|
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்; |
|
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த |
|
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும், |
|
65 |
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், |
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும், |
|
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும், |
|
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு, |
|
மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன் |
|
70 |
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய். |
| |
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை, |
|
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை |
|
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும், |
|
சேரா அறத்துச் சீர் இலோரும், |
|
75 |
அழி தவப் படிவத்து அயரியோரும், |
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார் |
|
நின் நிழல்: |
|
| |
அன்னோர் அல்லது இன்னோர் |
|
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை |
|
80 |
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் |
அருளும், அன்பும், அறனும், மூன்றும் |
|
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! |
|
8. செவ்வேள் |
| |
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் |
|
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும், |
|
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி |
|
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும், |
|
5 |
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும், |
ஆதிரை முதல்வனின் கிளந்த |
|
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும், |
|
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும், |
|
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும் |
|
10 |
பற்றாகின்று, நின் காரணமாக; |
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும். |
|
இமயக் குன்றினில் சிறந்து |
|
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை |
|
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா |
|
15 |
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் |
அருவி தாழ் மாலைச் சுனை. |
|
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட |
|
கதியிற்றே காரின் குரல். |
|
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ, |
|
20 |
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப, |
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை. |
|
| |
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம் |
|
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர, |
|
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர் |
|
25 |
மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற, |
நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப, |
|
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம! நின் |
|
குன்றத்தான் கூடல் வரவு. |
|
| |
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல் |
|
30 |
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ, |
காலொடு மயங்கிய கலிழ் கடலென, |
|
மால் கடல் குடிக்கும் மழை குரலென, |
|
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென, |
|
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின் |
|
35 |
குன்றம் குமுறிய உரை. |
| |
'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் |
|
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று; |
|
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி, |
|
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர் |
|
40 |
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல், |
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி; |
|
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல், |
|
அடியோர் மைந்தர் அகலத்து அகலா |
|
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி, |
|
45 |
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும் |
சிறப்பிற்றே தண் பரங்குன்று.' |
|
| |
'இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப் |
|
பனி மலர்க் கண்ணாரோடு ஆட நகை மலர் |
|
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில் |
|
50 |
காலை போய் மாலை வரவு.' |
| |
'இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப் |
|
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்;... |
|
துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம் |
|
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது; |
|
55 |
துனியல் நனி' 'நீ நின் சூள்.' |
| |
'என் பாணி நில் நில் எலாஅ! பாணி நீ, நின் சூள்: |
|
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்! |
|
ஈன்றாட்கு ஒரு பெண், இவள். |
|
"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு |
|
60 |
அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா; |
வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள் |
|
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்; |
|
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ? |
|
ஏழ் உலகும் ஆளி திரு வரைமேல் அன்பு அளிதோ? |
|
65 |
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின், |
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்: |
|
விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி; |
|
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்: |
|
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்; |
|
70 |
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு |
வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!' |
|
| |
யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு? |
|
'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்! |
|
கய வாய நெய்தல் அலர், கமழ்முகை மண நகை |
|
75 |
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்; |
முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண் |
|
பல் நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று நவின்றதை: |
|
இடு துனி கை ஆறா என், துயர் கூரச் |
|
சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின் |
|
80 |
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி, |
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை முருகன் |
|
தாள் தொழு தண் பரங்குன்று! |
|
| |
'தெரி இழாய் செல்க!' என்றாய்; எல்லா! யாம் பெற்றேம், |
|
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்; |
|
85 |
பருவத்துப் பல் மாண் நீ சேறலின் காண்டை |
எருமை இருந் தோட்டி எள்ளீயும் காளை |
|
செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி, |
|
அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி, |
|
நிரைவளை ஆற்று, இருஞ் சூள். |
|
| |
90 |
வளி பொரு சேண் சிமை வரையகத்தால் |
தளி பெருகும் தண் சினைய |
|
பொழில் கொளக் குறையா மலர, |
|
குளிர் பொய்கை அளறு நிறைய, |
|
மருதம் நளி மணல் ஞெமர்ந்த |
|
95 |
நனி மலர்ப் பெரு வழி, |
சீறடியவர் சாறு கொள எழுந்து; |
|
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும், |
|
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும், |
|
நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும், |
|
100 |
மணியும், கயிறும், மயிலும், குடாரியும், |
பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி; |
|
அரு வரைச் சேராத் தொழுநர், |
|
'கனவின் தொட்டது கை பிழையாகாது |
|
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை |
|
105 |
வரு புனல் அண்க' என வரம் கொள்வோரும்.
|
'கரு வயிறு உறுக' எனக் கடம்படுவோரும், |
|
'செய் பொருள் வாய்க்க' எனச் செவி சார்த்துவோரும், |
|
'ஐ அமர் அடுக' என அருச்சிப்போரும், |
|
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும், |
|
110 |
மஞ்சு ஆடு மலை முழக்கும், |
துஞ்சாக் கம்பலை |
|
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர் |
|
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை, |
|
தாட் தாமரை, தோட் தமனியக் கய மலர், |
|
115 |
எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை, |
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை, |
|
புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக் |
|
கூர் எயிற்றார் குவிமுலைப் பூணொடு, |
|
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி; |
|
120 |
அரிவையர் அமிர்த பானம் |
உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப; |
|
மைந்தர் மார்வம் வழி வந்த, |
|
செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப; |
|
| |
என ஆங்கு, |
|
125 |
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி, |
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண |
|
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த |
|
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம், |
|
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா, |
|
130 |
தண் பரங்குன்றம்! நினக்கு. |
|
9. செவ்வேள் |
| |
இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி, |
|
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும், |
|
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட |
|
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி |
|
5 |
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப, |
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி |
|
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ. |
|
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று |
|
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண், |
|
10 |
மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று, |
தணி மழை தலையின்று, தண் பரங்குன்று. |
|
| |
நான்மறை விரித்து, நல் இசை விளக்கும் |
|
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது: |
|
காதற் காமம், காமத்துச் சிறந்தது; |
|
15 |
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி: |
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான் |
|
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப் |
|
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல், |
|
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற |
|
20 |
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே; |
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை; |
|
சுணங்கறைப் பயனும் ஊடல் உள்ளதுவே. |
|
அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார் |
|
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத் |
|
25 |
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் |
கொள்ளார், இக் குன்று பயன். |
|
| |
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த |
|
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின், |
|
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ, |
|
30 |
'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும் |
கேழ் இலார் மாண் நலம் உண்கோ, திரு உடையார் |
|
மென் தோள்மேல் அல்கி நல்கலும் இன்று? |
|
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப் |
|
பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!' |
|
35 |
கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின் |
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி |
|
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை, |
|
'வருந்தல்' என, அவற்கு மார்பு அளிப்பாளை, |
|
'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை கோலாக |
|
40 |
இறுகிறுக யாத்துப் புடைப்ப; |
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல, |
|
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை, |
|
செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே, |
|
வெறி கொண்டான் குன்றத்து வண்டு. |
|
| |
45 |
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்; |
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்; |
|
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார் |
|
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத |
|
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள: |
|
50 |
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்; |
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்; |
|
தேர் அணி மணி கயிறு தெரிபு வருவார்; |
|
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்; |
|
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்; |
|
55 |
தோள் வளை ஆழி சுழற்றுவார் |
மென் சீர் மயில் இயலவர். |
|
வாள் மிகு வய மொய்ம்பின் |
|
வரை அகலத்தவனை வானவன் மகள் |
|
மாண் எழில் மலர் உண்கண் |
|
60 |
மட மொழியவர் உடன் சுற்றி, |
கடி சுனையுள் குளித்து ஆடுநரும், |
|
அறை அணிந்த அருஞ் சுனையான் |
|
நறவு உண் வண்டாய் நரம்பு உளர்நரும், |
|
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்; |
|
65 |
கோகுலமாய்க் கூவுநரும், |
ஆகுலம் ஆகுநரும் |
|
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் |
|
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு |
|
ஒத்தன்று, தண் பரங்குன்று. |
|
| |
70 |
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் |
அடும் போராள! நின் குன்றின்மிசை |
|
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும், |
|
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும், |
|
வல்லாரை வல்லார் செறுப்பவும், |
|
75 |
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய், |
செம்மைப் புதுப் புனல் |
|
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர், |
|
படாகை நின்றன்று; |
|
மேஎ எஃகினவை; |
|
80 |
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை; |
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை |
|
நயத் தகு மரபின் வியத் தகு குமர! |
|
வாழ்த்தினேம், பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம் |
|
நயத்தலின் சிறந்த எம் அடியுறை, |
|
85 |
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே. |
|
14. செவ்வேள் |
| |
கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற |
|
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே; |
|
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும் |
|
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே; |
|
5 |
அடியுறைமகளிர் ஆடும் தோளே, |
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே; |
|
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய |
|
தோகை ஆர் குரல், மணந்து தணந்தோரை, |
|
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே; |
|
10 |
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; |
மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின, |
|
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப; |
|
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் |
|
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும், |
|
15 |
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் |
பவழத்து அன்ன செம் பூத் தாஅய், |
|
கார் மலிந்தன்று, நின் குன்று. |
|
| |
போர் மலிந்து, |
|
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே! |
20 |
கறை இல் கார் மழை பொங்கி அன்ன |
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே! |
|
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி |
|
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே! |
|
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை |
|
25 |
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே! |
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச் |
|
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே! |
|
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து, |
|
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே! |
|
| |
30 |
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை, |
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம் |
|
இன்னும் இன்னும் அவை ஆகுக |
|
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே! |
|
17. செவ்வேள் |
| |
தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி, |
|
ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ, |
|
விடை அரை அசைத்த, வேலன், கடிமரம் |
|
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர், |
|
5 |
விரிமலர் மதுவின் மரம் நனை குன்றத்து |
கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ |
|
மாலை மாலை, அடி உறை, இயைநர், |
|
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்? |
|
| |
ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ, |
|
10 |
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ, |
ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ, |
|
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத, |
|
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ, |
|
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப, |
|
15 |
ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க, |
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க, |
|
ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின் |
|
நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற, |
|
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற, |
|
20 |
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல் |
மாறு அட்டான் குன்றம் உடைத்து. |
|
| |
பாடல் சான்று பல் புகழ் முற்றிய |
|
கூடலொடு பரங்குன்றின் இடை, |
|
கமழ் நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப, |
|
25 |
நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து; |
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின் |
|
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று. |
|
வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால், |
|
திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு |
|
30 |
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை |
வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப; |
|
தேயா மண்டிலம் காணுமாறு இன்று. |
|
| |
வளை முன் கை வணங்கு இறையார், |
|
அணை மென் தோள் அசைபு ஒத்தார் |
|
35 |
தார் மார்பின் தகை இயலார், |
ஈர மாலை இயல் அணியார், |
|
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட, |
|
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா: |
|
அனைய, பரங்குன்றின் அணி. |
|
| |
40 |
கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது |
அரோ;மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு |
|
உழக்கும் அரோ;தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும், |
|
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும், |
|
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும், |
|
45 |
கொய் உளை மான் தேர்க் கொடித் தேரான் கூடற்கும், |
கை ஊழ் தடுமாற்றம் நன்று. |
|
| |
என ஆங்கு, |
|
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி, |
|
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ! |
|
50 |
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி, |
அணி நெடுங் குன்றம் பாடுதும்; தொழுதும்; |
|
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் |
|
ஏம வைகல் பெறுக, யாம் எனவே. |
|
18. செவ்வேள் |
| |
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப, |
|
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல், |
|
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து, |
|
சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின் |
|
5 |
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து, |
ஏறுமாறு ஏற்கும் இக் குன்று. |
|
| |
ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன் |
|
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்: |
|
'உள்ளியது உணர்ந்தேன்; அஃது உரை; இனி, நீ எம்மை |
|
10 |
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு' என்பாளைப் பெயர்த்து, |
அவன் 'காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ் |
|
பேதுற்ற இதனைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை |
|
ஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு உணர்ப்பித்தல் |
|
ஆய் தேரான் குன்ற இயல்பு. |
|
| |
15 |
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல், |
மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார், |
|
கை வளம் பூத்த வடுவொடு, காணாய் நீ? |
|
மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்: |
|
மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி |
|
20 |
நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம |
பூத்தன பாணா! நின் பாட்டு. |
|
| |
தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ, |
|
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால், |
|
கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து, |
|
25 |
இருள் போழும் கொடி மின்னால் |
வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் மேல் ஞாயிறு! நின் |
|
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து, |
|
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் |
|
தொழில் வீற்றிருந்த நகர். |
|
| |
30 |
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி |
சூர் ததும்பு வரைய காவால், |
|
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை, |
|
ஏர் ததும்புவன பூ அணி செறிவு. |
|
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் |
|
35 |
காந்தள், செறிந்த கவின், |
கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின் |
|
புரி நெகிழ்ப்பார் போன்றன கை. |
|
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே, |
|
வச்சிரத்தான் வான வில்லு. |
|
| |
40 |
வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின |
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம். |
|
வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச் |
|
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து, |
|
போர் ததும்பும் அரவம் போல, |
|
45 |
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம். |
அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை; |
|
குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை; |
|
எருவை கோப்ப, எழில் அணி திருவில் |
|
வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால், |
|
50 |
கூனி வளைத்த சுனை. |
| |
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து, |
|
சுருதியும் பூவும் சுடரும் கூடி, |
|
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும், |
|
செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை, |
|
55 |
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு, |
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே! |