உலகம் ஒரு நிறையாத் தான் ஓர்
நிறையாப்
|
|
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு
அனைத்தும்
|
|
தான் வாட, வாடாத
தன்மைத்தே-தென்னவன்
|
|
நான்மாடக் கூடல் நகர்.
|
|
7. மதுரை |
மாயோன் கொப்பூழ் மலர்ந்த
தாமரைப்
|
|
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
|
|
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
|
|
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல்
கோயில்;
|
|
5 |
தாதின் அனையர், தண் தமிழ்க்
குடிகள்;
|
தாது உண் பறவை அனையர், பரிசில்
வாழ்நர்;
|
|
பூவினுள் பிறந்தோன் நாவினுள்
பிறந்த
|
|
நான்மறைக் கேள்வி நவில் குரல்
எடுப்ப
|
|
ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
|
|
10 |
வாழிய வஞ்சியும் கோழியும்
போலக்
|
கோழியின் எழாது, எம் பேர் ஊர்
துயிலே.
|
8. மதுரை |
தண் தமிழ் வேலித்
தமிழ்நாட்டகம் எல்லாம்
|
|
நின்று நிலைஇப் புகழ் பூத்தல்
அல்லது,
|
|
குன்றுதல் உண்டோ மதுரை-கொடித்
தேரான்
|
|
குன்றம் உண்டாகும் அளவு?
|
9. மதுரை |
செய்யாட்கு இழைத்த
திலகம்போல், சீர்க்கு ஒப்ப,
|
|
வையம் விளங்கிப் புகழ் பூத்தல்
அல்லது,
|
|
பொய்யாதல் உண்டோ மதுரை-புனை
தேரான்
|
|
வையை உண்டாகும் அளவு?
|
10. மதுரை |
கார்த்திகை காதில் கன மகர
குண்டலம்போல்,
|
|
சீர்த்து விளங்கித் திருப்
பூத்தல் அல்லது,
|
|
கோத்தை உண்டாமோ மதுரை-கொடித்
தேரான்
|
|
வார்த்தை உண்டாகும் அளவு?
|
11. மதுரை |
ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப்
பார்த்து உவக்கும்-
|
|
சேய் மாடக் கூடலும், செவ்வேள்
பரங்குன்றும்,
|
|
வாழ்வாரே வாழ்வார்
எனப்படுவார்; மற்றையார்
|
|
போவார் ஆர், புத்தேள் உலகு?
|