6. வையை |
| |
நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம் |
|
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்; |
|
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ, |
|
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ, |
|
5 |
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் |
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை, |
|
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல |
|
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை, |
|
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத் |
|
10 |
தாயிற்றே தண் அம் புனல். |
| |
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி, |
|
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும் |
|
வகைசாலும், வையை வரவு. |
|
| |
தொடி தோள் செறிப்ப, தோள்வளை இயங்க, |
|
15 |
கொடி சேரா, திருக் கோவை காழ் கொள, |
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக, |
|
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும், |
|
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட, |
|
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த, |
|
20 |
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க, |
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென, |
|
வரைச் சிறை உடைத்ததை வையை: 'வையைத் |
|
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக' எனும் |
|
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று. |
|
| |
25 |
அன்று, போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென, |
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல; |
|
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் |
|
ஈரணி அணியின், இகல் மிக நவின்று, |
|
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண் |
|
30 |
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின் |
அணிஅணி ஆகிய தாரர், கருவியர், |
|
அடு புனலது செல அவற்றை இழிவர்: |
|
கைம்மான் எருத்தர், கலி மட மாவினர், |
|
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர், |
|
35 |
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர், |
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை |
|
ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ, |
|
| |
சேரி இளையர் செல அரு நிலையர், |
|
வலியர் அல்லோர் துறைதுறை அயர, |
|
40 |
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர, |
சாறும் சேறும் நெய்யும் மலரும் |
|
நாறுபு நிகழும், யாறு வரலாறு. |
|
| |
நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து, |
|
வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை, |
|
45 |
புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு. |
| |
மாறு மென் மலரும், தாரும் கோதையும், |
|
வேரும் தூரும், காயும் கிழங்கும், |
|
பூரிய மாக்கள் உண்பது மண்டி |
|
நார் அரி நறவம் உகுப்ப, 'நலன் அழிந்து, |
|
50 |
வேறாகின்று இவ் விரி புனல் வரவு' என, |
சேறு ஆடு புனலது செலவு. |
|
வரை அழி வால் அருவி வாதாலாட்ட, |
|
கரை அழி வால் அருவி கால் பாராட்ட, |
|
'இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல் |
|
55 |
புரைவது பூந் தாரான் குன்று' எனக் கூடார்க்கு |
உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடி, |
|
சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம் |
|
புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத் |
|
தான் மலர்ந்தன்றே, |
|
60 |
தமிழ் வையைத் தண்ணம் புனல். |
| |
'விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்.' |
|
'தளிர் அறிந்தாய், தாம் இவை.' |
|
| |
'பணிபு ஒசி பண்ப! பண்டெல்லாம் நனி உருவத்து; |
|
என்னோ துவள் கண்டீ? |
|
65 |
எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக் |
கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச் |
|
செய்ததும் வாயாளோ? செப்பு.' |
|
| |
'புனை புணை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை |
|
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர் |
|
70 |
பெருக்கு அன்றோ, வையை வரவு?' |
| |
'ஆம்ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம் |
|
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச் |
|
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல்! வையைப் |
|
பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை. |
|
75 |
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும், |
குருகு இரை தேரக் கிடக்கும் பொழி காரில், |
|
இன் இளவேனில், இது அன்றோ வையை? நின் |
|
வையை வயமாக வை. |
|
செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல, |
|
80 |
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை; |
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை; |
|
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும் |
|
பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும் |
|
அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும், |
|
85 |
பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் |
கனற்றுபு காத்தி, வரவு!' |
|
| |
'நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து, |
|
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல் |
|
அல்லா விழுந்தானை எய்தி, எழுந்து ஏற்று யான் |
|
90 |
கொள்ளா அளவை, எழும் தேற்றாள்: கோதையின் |
உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது? என |
|
| |
தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர் |
|
யாறு உண்டோ? இவ் வையை யாறு. |
|
| |
'இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால் |
|
95 |
தலை தொட்டேன், தண் பரங்குன்று!' |
| |
'சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத் |
|
துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி |
|
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன் |
|
அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே |
|
100 |
வல் இருள் நீயல்; அது பிழையாகும்' என, |
இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து, |
|
வல்லவர் ஊடல், உணர்த்தர, நல்லாய்! |
|
களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட, |
|
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப; |
|
105 |
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் |
வாடற்க, வையை! நினக்கு. |
|
7. வையை |
| |
திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து, |
|
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது, |
|
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு, |
|
வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி |
|
5 |
இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது, |
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய |
|
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன |
|
பெயலாற் பொலிந்து, பெரும் புனல் பல நந்த, |
|
நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த, |
|
10 |
வந்தன்று, வையைப் புனல். |
| |
நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய், |
|
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு, |
|
துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும் |
|
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு, |
|
15 |
உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி; |
உழவர் களி தூங்க, முழவு பணை முரல, |
|
ஆடல் அறியா அரிவை போலவும், |
|
ஊடல் அறியா உவகையள் போலவும், |
|
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது; |
|
20 |
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப் |
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம் |
|
செய்கின்றே, செம் பூம் புனல். |
|
| |
'கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர் |
|
அவிழ்ந்த மலர் மீதுற்றென', ஒருசார்; |
|
25 |
மாதர் மடநல்லார், மணலின் எழுதிய |
பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்; |
|
'அகவயல் இள நெல் அரிகால் சூடு |
|
தொகு புனல் பரந்தெ'னத் துடி பட, ஒருசார்; |
|
'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்; |
|
30 |
'கார் தூம்பு அற்றது வான்' என, ஒருசார்; |
'பாடுவார் பாக்கம் கொண்டென, |
|
ஆடுவார் சேரி அடைந்தென, |
|
கழனி வந்து கால் கோத்தென, |
|
பழன வாளை பாளை உண்டென, |
|
35 |
வித்து இடு புலம் மேடு ஆயிற்றென', |
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப் |
|
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து, |
|
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ, |
|
பழன உழவர், பாய் புனல் பரத்தந்து. |
|
| |
40 |
இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து, |
வரை புரை உருவின் நுரை பல சுமந்து, |
|
பூ வேய்ந்து, பொழில் பரந்து; |
|
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர், |
|
அலர் தண் தாரவர், காதில் |
|
45 |
தளிர் செரீஇ, கண்ணி பறித்து; |
கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில், |
|
மேகலை, காஞ்சி, வாகுவலயம், |
|
எல்லாம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன் |
|
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட |
|
50 |
தானையான் வையை வனப்பு. |
| |
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள் |
|
துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள் |
|
அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி, |
|
கை புதைஇய வளை |
|
55 |
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் |
போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு |
|
பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்; |
|
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் |
|
செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே; |
|
60 |
வையைப் பெருக்கு வடிவு. |
| |
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர, |
|
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்; |
|
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே, |
|
கூர் நறா ஆர்ந்தவள் கண். |
|
65 |
கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப் |
பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப் |
|
பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை, |
|
'என்னை வருவது எனக்கு?' என்று, இனையா, |
|
நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி; |
|
70 |
சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர, |
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர்தம்முள் |
|
பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு, |
|
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் |
|
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து, |
|
75 |
தீர்விலதாகச் செருவுற்றாள் செம் புனல் |
ஊருடன் ஆடுங்கடை. |
|
| |
புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும் |
|
எழூஉப் புணர் யாழும், இசையும், கூட; |
|
குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப; |
|
80 |
மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க; |
பொருது இழி வார் புனல் பொற்பு அஃது |
|
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் |
|
திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார் |
|
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை! |
|
85 |
நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க |
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே. |
|
10. வையை |
| |
மலைவரை மாலை அழி பெயல் காலை, |
|
செல வரை காணாக் கடல்தலைக் கூட |
|
நில வரை அல்லல் நிழத்த, விரிந்த |
|
பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய், |
|
5 |
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய |
மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி, |
|
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ, பறை அறையப் |
|
போந்தது வையைப் புனல். |
|
| |
புனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி, |
|
10 |
தாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை |
ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ, |
|
நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும் |
|
முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி; |
|
புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும், |
|
15 |
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும், |
அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச் |
|
சகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி; |
|
வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி; |
|
முதியர், இளையர்: முகைப் பருவத்தர், |
|
20 |
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார் |
இரு திற மாந்தரும் இன்னினியோரும் |
|
விரவு நரையோரும் வெறு நரையோரும் |
|
பதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்; |
|
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள |
|
25 |
விதி கூட்டிய இய மென் நடை போல, |
பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி |
|
| |
நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்; |
|
பேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்; |
|
மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்; |
|
30 |
வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி, |
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது, |
|
யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்; |
|
காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து, |
|
சேமத் திரை வீழ்த்துச் சென்று, அமளி சேர்குவோர்: |
|
| |
35 |
தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட, |
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம |
|
மட நடைப் பாட்டியர்த் தப்பி, தடை இறந்து, |
|
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும் |
|
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல், |
|
40 |
யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல் |
| |
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் |
|
மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று, |
|
நடத்த நடவாது நிற்ப; மடப் பிடி, |
|
அன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல் |
|
45 |
செல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக் |
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று, |
|
மை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற, |
|
செய் தொழில் கொள்ளாது, மதி செத்து, சிதைதர; |
|
கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி |
|
50 |
நீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து |
வாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து, |
|
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல் |
|
இதையும் கயிறும் பிணையும் இரியச் |
|
சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும் |
|
55 |
திசை அறி நீகானும் போன்ம். |
| |
பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல் |
|
அருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர், |
|
ஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியின், |
|
பல் சனம் நாணிப் பதைபதைப்பு மன்னவர் |
|
60 |
தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை |
ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி, |
|
நின்ற நிகழ்ச்சியும் போன்ம். |
|
காமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ, |
|
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை |
|
65 |
கள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி, |
உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள் |
|
பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக் |
|
கரப்பார், களி மதரும் போன்ம். |
|
கள்ளொடு காமம் கலந்து, கரை வாங்கும் |
|
70 |
வெள்ளம் தரும், இப் புனல். |
| |
புனல் பொருது மெலிந்தார் திமில் விட, |
|
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ, |
|
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து |
|
திகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின் |
|
75 |
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர், |
அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி, |
|
எறி மகர வலயம் அணி திகழ் நுதலியர், |
|
மதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப; |
|
மீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால் |
|
80 |
வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்; |
செங் குங்குமச் செழுஞ் சேறு, |
|
பங்கம் செய் அகில் பல பளிதம், |
|
மறுகுபட அறை புரை அறு குழவியின் |
|
அவி அமர் அழலென அரைக்குநர்; |
|
85 |
நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை, |
வித்தி அலையில், 'விளைக! பொலிக'! என்பார்; |
|
இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன், |
|
நல்லது வெஃகி, வினை செய்வார்; |
|
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப, |
|
90 |
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்; |
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்; |
|
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும், |
|
கோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல் |
|
உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார் |
|
95 |
வண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக் |
கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகை |
|
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி |
|
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம் |
|
பின்னும், மலர்க் கண் புனல். |
|
| |
100 |
தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும், |
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும், |
|
வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும், |
|
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப் |
|
பைய விளையாடுவாரும், மென் பாவையர் |
|
105 |
செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார், |
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார் |
|
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி, |
|
அம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர் |
|
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி, |
|
110 |
களிறு போர் உற்ற களம்போல, நாளும் |
தெளிவு இன்று, தீம் நீர்ப் புனல். |
|
| |
மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல் |
|
வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை |
|
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து, |
|
115 |
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்; |
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல், |
|
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி, |
|
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும், |
|
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத, |
|
120 |
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, |
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா, |
|
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும் |
|
பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து |
|
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து, |
|
125 |
கால் திரிய ஆர்க்கும் புகை. |
| |
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப் |
|
பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி, |
|
செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க |
|
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல், |
|
130 |
அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை |
ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே. |
|
11. வையை |
| |
'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப, |
|
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து, |
|
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் |
|
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர, |
|
5 |
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி |
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் |
|
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின் |
|
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன் |
|
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை |
|
10 |
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த |
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி |
|
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில் |
|
எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால் |
|
புரை கெழு சையம் பொழி மழை தாழ, |
|
15 |
நெரிதரூஉம் வையைப் புனல். |
| |
'வரையன புன்னாகமும், |
|
கரையன சுரபுன்னையும், |
|
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம் |
|
மனைமாமரம் வாள்வீரம், |
|
20 |
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள், |
தாய தோன்றி தீயென மலரா, |
|
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம், |
|
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப் |
|
பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல் |
|
25 |
வயவர் அரி மலர்த் துறை என்கோ? |
அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின், |
|
திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின் |
|
அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப் |
|
பருகு படி மிடறு என்கோ? பெரிய |
|
30 |
திருமருத நீர்ப் பூந் துறை.' |
| |
'ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல், |
|
நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு, |
|
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி, |
|
உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம் |
|
35 |
வழியது பக்கத்து அமரர் உண்டி |
மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க; |
|
எண் மதி நிறை, உவா இருள் மதி போல |
|
நாள் குறைபடுதல் காணுநர் யாரே? |
|
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை! |
|
40 |
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இரு நாள் பெற! |
மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர், |
|
காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென, |
|
மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல் |
|
இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:' |
|
45 |
என ஆங்கு |
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை |
|
படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம் |
|
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை |
|
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு. |
|
| |
50 |
ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர் |
குந்தம் ஏந்துவோர், கொள்வார் கோல் கொள்ளக் |
|
கொடித் திண் தேர் ஏறுவோர்,புள் ஏர் புரவி பொலம் |
|
படைக் கைம்மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு |
|
ஊர்பு உழக்குநரும், கண் ஆரும் சாயற் கழித் |
|
55 |
துரப்போரை வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும், |
மணம் வரு மாலையின் வட்டிப்போரைத் |
|
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும், |
|
தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும் |
|
உருகெழு தோற்றம் உரைக்குங்கால், நாளும் |
|
60 |
பொரு களம் போலும் தகைத்தே பரி கவரும் |
பாய் தேரான் வையை அகம். |
|
| |
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் |
|
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை |
|
ஒளி திகழ் தகை வகை செறி பொறி |
|
65 |
புனை வினைப் பொலங் கோதையவரொடு, |
பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து, |
|
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார், |
|
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற, |
|
சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி, |
|
70 |
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் |
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை. |
|
கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல், |
|
நீர் ஒவ்வா வையை! நினக்கு. |
|
| |
கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க, |
|
75 |
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, |
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து, |
|
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை |
|
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, |
|
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப, |
|
80 |
'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என |
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர், |
|
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட, |
|
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் |
|
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர் |
|
85 |
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், |
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர, |
|
வையை! நினக்கு மடை வாய்த்தன்று. |
|
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து, |
|
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர் |
|
90 |
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, |
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்? |
|
நீ உரைத்தி, வையை நதி! |
|
| |
ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள், |
|
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி, |
|
95 |
சாய் இழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; |
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்; |
|
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின் |
|
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்' என்று |
|
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே, |
|
100 |
கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண். |
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக் |
|
குவளைப் பசுந் தண்டு கொண்டு. |
|
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை, |
|
'நில்லிகா!' என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே |
|
105 |
மல்லிகா மாலை வளாய். |
| |
தண்டு தழுவா, தாவு நீர் வையையுள், |
|
கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க, |
|
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க, |
|
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன் |
|
110 |
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப; |
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ, |
|
தாய் அத் திறம் அறியாள், தாங்கி, 'தனிச் சேறல்; |
|
ஆயத்தில் கூடு' என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே |
|
சேய் உற்ற கார் நீர் வரவு. |
|
115 |
'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும், |
'"கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல, |
|
விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்' என்மாரும், |
|
'பூ வீழ் அரியின் புலம்பப் போகாது, |
|
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!' என்மாரும், |
|
120 |
'"கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும், |
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!' என்மாரும் |
|
| |
'கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்: |
|
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்: |
|
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது, |
|
125 |
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்: |
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட |
|
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை |
|
ஓர்மின்: பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் |
|
பாடி, கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் |
|
130 |
விரித்து ஆடும் தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ |
நெரித்தாளை முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து, |
|
பின்னும்,கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின் |
|
என ஆங்கு |
|
| |
இன்ன பண்பின் நின் தைந் நீராடல் |
|
135 |
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட |
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம |
|
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் |
|
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்; |
|
மறு முறை அமையத்தும் இயைக! |
|
140 |
நறு நீர் வையை நயத் தகு நிறையே! |
|
12. வையை |
| |
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி, |
|
விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி, |
|
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்; |
|
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம், |
|
5 |
அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய; |
தகரமும், ஞாழலும், தாரமும், தாங்கி, |
|
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர் |
|
வளி வரல் வையை வரவு. |
|
| |
'வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய், |
|
10 |
அம் தண் புனல் வையை யாறு' எனக் கேட்டு, |
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும், |
|
பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும், |
|
அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப் |
|
புகைகெழு சாந்தம் பூசுவோரும், |
|
15 |
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும், |
வேர் பிணி பல் மலர் வேயுமோரும், |
|
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும், |
|
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்; |
|
வாச நறு நெய் ஆடி, வான் துகள் |
|
20 |
மாசு அறக் கண்ணடி வயக்கி, வண்ணமும் |
தேசும் ஒளியும் திகழ நோக்கி, |
|
வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்; |
|
இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர், |
|
கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர், |
|
25 |
ஓசனை கமழும் வாச மேனியர், |
மட மா மிசையோர், |
|
பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர் |
|
| |
கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும், |
|
வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும், |
|
30 |
விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி, |
ஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல் |
|
உரைதர வந்தன்று, வையை நீர்; வையைக் |
|
கரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்; |
|
நிவந்தது, நீத்தம் கரைமேலா; நீத்தம் |
|
35 |
கவர்ந்தது போலும், காண்பவர் காதல். |
| |
முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி |
|
ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை |
|
எல்லாம் தெரியக் கேட்குநர் யார்? அவை |
|
கில்லா; கேள்வி கேட்டன சிலசில: |
|
40 |
ஒத்த குழலின் ஒலி எழ; முழவு இமிழ், |
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, |
|
ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்; |
|
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் |
|
அத் தக அரிவையர் அளத்தல் காண்மின். |
|
| |
45 |
'நாணாள்கொல் தோழி! "நயன் இல் பரத்தையின் |
தோள் நலம் உண்டு, துறந்தான்" என, ஒருத்தி |
|
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி |
|
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள், |
|
நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?' என்மரும், |
|
50 |
'கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் |
ஓட்டை மனவன்; உரம் இலி' என்மரும், |
|
'சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்; |
|
நெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின் நிறை |
|
அஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்?' என்மரும், |
|
55 |
'பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன். |
நாணாள் அவனை, இந் நாரிகை' என்மரும் |
|
| |
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப, |
|
கமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில் |
|
இழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி, |
|
60 |
'பிழையினை' என்ன, பிழை ஒன்றும் காணான், |
தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின். |
|
'பார்த்தாள், ஒருத்தி நினை' என, 'பார்த்தவளைப் |
|
பொய்ச் சூளாள் என்பது அறியேன், யான்' என்று இரந்து, |
|
மெய்ச் சூள் உறுவானை, மெல்இயல், 'பொய்ச் சூள்' என்று, |
|
65 |
ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல; |
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப் |
|
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள் |
|
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய, |
|
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் |
|
70 |
பாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர, |
நில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து |
|
மல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து, |
|
எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன் |
|
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் |
|
75 |
வல்லதால், வையைப் புனல். |
என ஆங்கு |
|
மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம், |
|
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல், |
|
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி, |
|
80 |
நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை, |
எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ; |
|
தேறித் தெளிந்து, செறி இருள் மால் மாலை; |
|
பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று; |
|
துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்: |
|
85 |
கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே |
போர் அடு தானையான் யாறு. |
|
சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த |
|
கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ, |
|
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி, |
|
90 |
அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக் |
காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள், |
|
நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின். |
|
| |
துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று; |
|
'புனல்' என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை; |
|
95 |
உரையின் உயர்ந்தன்று, கவின். |
போர் ஏற்றன்று, நவின்று; தகரம் |
|
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று; |
|
துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று; |
|
விசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க. |
|
| |
100 |
இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர், |
நன்பல நன்பல நன்பல வையை! |
|
நின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே. |
|
16. வையை |
| |
கரையே கை வண் தோன்றல் ஈகை போன்ம் என, |
|
மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும், |
|
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும், |
|
எவ் வயினானும் மீதுமீது அழியும். |
|
5 |
துறையே முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம், |
பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி |
|
வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர் |
|
கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ, |
|
தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் |
|
10 |
தத்து அரிக் கண்ணார் தலைதலை வருமே. |
செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின், |
|
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும், |
|
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும். |
|
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம் |
|
15 |
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே |
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல். |
|
கான் அல்அம் காவும், கயமும், துருத்தியும், தேன் |
|
தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம் |
|
பூத்தன்று வையை வரவு. |
|
| |
20 |
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, |
குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள், |
|
பெருந் தகை மீளி வருவானைக் கண்டே, |
|
இருந் துகில் தானையின் ஒற்றி, 'பொருந்தலை; |
|
பூத்தனள்; நீங்கு' எனப் பொய் ஆற்றால், தோழியர் |
|
25 |
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் |
நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து, |
|
இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான், |
|
மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி, |
|
குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர், |
|
30 |
'பூத்தனள் நங்கை; பொலிக!' என நாணுதல் |
வாய்த்தன்றால் வையை வரவு. |
|
| |
மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க் |
|
கரை மரம் சேர்ந்து கவினி; மடவார் |
|
நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர் |
|
35 |
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தாஅய்; |
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய |
|
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும், |
|
தேன் இமிர் வையைக்கு இயல்பு. |
|
| |
கள்ளே புனலே புலவி இம் மூன்றினும், |
|
40 |
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை, |
பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும், |
|
செல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர் |
|
அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து |
|
வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான், |
|
45 |
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத் |
தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம் |
|
கொடித் தேரான் வையைக்கு இயல்பு. |
|
| |
வரை ஆர்க்கும் புயல்; கரை |
|
திரை ஆர்க்கும், இத் தீம் புனல்; |
|
50 |
கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர், |
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால் |
|
நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும், |
|
பூத்த புகையும், அவியும் புலராமை |
|
மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம் |
|
55 |
வறாஅற்க, வையை! நினக்கு. |
|
20. வையை |
| |
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து, |
|
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை |
|
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில் |
|
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக் |
|
5 |
குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று. |
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி |
மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான் |
|
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம் |
|
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால |
|
10 |
கான் ஆற்றும் கார் நாற்றம்,கொம்பு உதிர்த்த கனி நாற்றம்; |
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை. |
|
| |
தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று |
|
வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப, |
|
ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று: உயர் மதிலில் |
|
15 |
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ, |
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும், |
|
வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும், |
|
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும், |
|
கயமாப் பேணிக் கலவாது ஊரவும், |
|
20 |
மகளிர் கோதை மைந்தர் புனையவும், |
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும், |
|
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர், |
|
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் |
|
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி, |
|
25 |
மாட மறுகின் மருவி மறுகுற, |
கூடல் விழையும் தகைத்து தகை வையை. |
|
| |
புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார், |
|
தகை வகை தைஇயினார் தார்; |
|
வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச் |
|
30 |
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் |
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின் |
|
அயல் அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் |
|
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக, |
|
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு, |
|
35 |
நொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க, |
| |
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்; |
|
செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன |
|
நேர் இதழ் உண்கணார் நிரை காடாக, |
|
ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின். |
|
| |
40 |
என ஆங்கு, |
ஒய்யப் போவாளை, 'உறழ்ந்தோள் இவ் வாணுதல்' |
|
வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய |
|
நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று, |
|
'செறி நிரைப் பெண்' வல் உறழ்பு 'யாது தொடர்பு?' என்ன |
|
45 |
மறலினாள், மாற்றாள் மகள். |
| |
வாய் வாளா நின்றாள், |
|
செறிநகை சித்தம் திகைத்து. |
|
| |
ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம் |
|
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை! |
|
50 |
பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத் |
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி! |
|
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி, |
|
காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில், |
|
மூரி தவிர முடுக்கு முது சாடி! |
|
55 |
மட மதர் உண்கண் கயிறாக வைத்துத் |
தட மென் தோள் தொட்டு, தகைத்து மட விரலால் |
|
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத் |
|
தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப் |
|
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ் |
|
60 |
வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து, |
மத்திகை மாலையா மோதி, அவையத்துத் |
|
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட |
|
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து, யாம். |
|
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும், |
|
65 |
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன் |
| |
தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு |
|
ஊடினார், வையையகத்து. |
|
'சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க; |
|
மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை |
|
70 |
வந்திக்க வார்' என |
| |
'மனத் தக்க நோய் இது; |
|
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு; |
|
போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று, |
|
மாற்றாளை மாற்றாள் வரவு.' |
|
| |
75 |
'அ...சொல் நல்லவை நாணாமல் |
தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா; |
|
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண் |
|
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல், |
|
தந்தானைத் தந்தே, தருக்கு.' |
|
| |
80 |
மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின் |
கால சிலம்பும் கழற்றுவான்; சால, |
|
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்; |
|
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.' |
|
என ஆங்கு |
|
| |
85 |
வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு |
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே. |
|
| |
சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால் |
|
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா; |
|
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் |
|
90 |
இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்; |
நிகழ்வது அறியாது நில்லு நீ, நல்லாய்! |
|
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர் |
|
அகலம் கடிகுவேம்; என்பவை யார்க்கானும் |
|
முடி பொருள் அன்று முனியல் முனியல்! |
|
95 |
கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!' |
| |
என ஆங்கு |
|
இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும், |
|
தென்னவன் வையைச் சிறப்பு. |
|
கொடி இயலார் கைபோல் குவிந்த முகை, |
|
100 |
அரவு உடன்றவைபோல் விரிந்த குலை, |
குடை விரிந்தவை போலக் கோலும் மலர், |
|
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர், |
|
சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும், |
|
அருவி சொரிந்த திரையின் துரந்து; |
|
105 |
நெடு மால் சுருங்கை நடு வழிப் போந்து |
கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும் |
|
நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல் |
|
கடி மதில் பெய்யும் பொழுது. |
|
| |
நாம் அமர் ஊடலும் நட்பும், தணப்பும், |
|
110 |
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட, |
தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல் |
|
பூ மலி வையைக்கு இயல்பு. |
|
22. வையை |
| |
ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த |
|
களிறு நிரைத்தவைபோல் கொண்மூ நெரிதர, |
|
அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன் |
|
முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி, |
|
5 |
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை |
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ, |
|
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி, அவன் |
|
வண்மைபோல் வானம் பொழிந்த நீர் - மண்மிசை |
|
ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன் |
|
10 |
தானையின் ஊழி...... தாவூக் கத்தின், |
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத- |
|
.... ... ... நீக்கிப் பு... |
|
கான மலைத்தரை கொன்று மணல பினறீ |
|
வான மலைத்த ...... வ |
|
15 |
....... லைத்தவ மண முரசு எறிதர, |
தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று, |
|
| |
பொறிவி யாற்றுறி - துவர், புகை, சாந்தம், |
|
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற |
|
நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி, |
|
20 |
பிற தொழின ... ம் பின்பின் தொடர; |
செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர், |
|
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர், |
|
தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்; |
|
மாவும், களிறும், மணி அணி வேசரி, |
|
25 |
காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி; |
வேல் ஆற்றும் மொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்- |
|
போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு, |
|
தார் அணி மைந்தர் தவப் பயன் சான்மென- |
|
கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ், |
|
30 |
வார் அணி கொம்மை, வகை அமை மேகலை, |
ஏர் அணி இலங்கு எயிற்று, இன் நகையவர்- |
|
'சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன் |
|
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்?' எனத் |
|
தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்- |
|
35 |
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின். |
| |
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு |
|
எதிர்வ பொருவி ..... மேறு மாறு இமிழ்ப்ப, |
|
கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில் |
|
புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர, |
|
40 |
ஊது சீர்த் தீம் குழல் இயம்ப, மலர்மிசைத் |
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப, |
|
....... துடிச் சீர் நடத்த வளி நடன் |
|
மெல் இணர்ப் பூங் கொடி மேவர நுடங்க, |
|
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்- |
|
45 |
தீம் புனல் வையைத் திருமருத முன்துறையால். |
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல், |
|
... ... ... புரை தீர் நெடு மென் |
|
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின், |
|
நீள் தாழ்பு தோக்கை, நித்தில அரிச் சிலம்பு, |
|
50 |
... |
தி 2. வையை |
உரை |
| |
மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ, |
|
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான், |
|
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ, |
|
காமரு வையை கடுகின்றே, கூடல். |
|
| |
5 |
'நீர் அணி கொண்டன்று வையை' என விரும்பி, |
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி, |
|
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின் |
|
சேர் அணி கொண்டு, நிறம் ஒன்று வெவ்வேறு |
|
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி, |
|
10 |
ஏர் அணி கொண்டார், இயல். |
| |
கை புனை தாரினர், கண்ணியர், |
|
ஐ எனும் ஆவியர், ஆடையர், |
|
நெய் அணி கூந்தலர், பித்தையர், |
|
மெய் அணி யானை மிசையராய், ஒய்யெனத் |
|
15 |
தங்காச் சிறப்பின் தளிர் இயலார் செல்ல; |
பொங்கு புரவிப்புடைப் போவோரும், பொங்கு சீர் |
|
வையமும் தேரும் அமைப்போரும்; எவ் வாயும் |
|
பொய்யாம் போய் என்னாப் புடை கூட்டிப் போவநர் |
|
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார்; வையத்துக்கு |
|
20 |
ஊடுவார்; ஊடல் ஒழிப்பார்; உணர்குவார்: |
ஆடுவார், பாடுவார்; ஆர்ப்பார், நகுவார்; நக்கு |
|
ஓடுவார்; ஓடித் தளர்வார்; போய், உற்றவரைத் |
|
தேடுவார்; ஊர்க்குத் திரிவார் இலராகி- |
|
கற்றாரும், கல்லாதவரும், கயவரும், |
|
25 |
பெற்றாரும், பெற்றாற் பிழையாத பெண்டிரும், |
பொற்றேரான் தானும், பொலம் புரிசைக் கூடலும், |
|
முற்றின்று-வையைத் துறை. |
|
| |
துறை ஆடும் காதலர் தோள் புணையாக, |
|
மறை ஆடுவாரை அறியார் மயங்கி, |
|
30 |
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் |
நிகழும் நிகழ்ச்சி எம்பால் என்று, ஆங்கே, |
|
இகல் பல செல்வம் விளைத்தவட் கண்டு, இப்பால், |
|
அகல் அல்கும் வையைத் துறை. |
|
காதலான் மார்பின் கமழ் தார், புனல் வாங்கி, |
|
35 |
ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு, 'மற்று அது |
தா தா' என்றாளுக்கு, 'தானே புறன் தந்து |
|
வேய்தந்தது'. 'என்னை? விளைந்தமை மற்று அது |
|
நோதலே செய்யேன், நுணங்கு இழையாய்! இச் செவ்வி |
|
போதல் உண்டாம்கொல்? அறிந்து புனல் புணர்த்தது! |
|
40 |
ஓஒ! பெரிதும் வியப்பு. |
கயத் தக்க பூப் பெய்த காமக் கிழமை |
|
நயத் தகு நல்லாளைக் கூடுமா கூடும் |
|
முயக்குக்கு, செவ்வி முலையும் முயக்கத்து |
|
நீரும் அவட்குத் துணை; கண்ணின் நீர் விட்டோய்! |
|
45 |
நீயும் அவட்குத் துணை. |
| |
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல், |
|
மணி எழில், மா மேனி, முத்த முறுவல், |
|
அணி பவளச் செவ் வாய், அறம் காவற் பெண்டிர் |
|
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித் |
|
50 |
தணிவின்று, வையைப் புனல். |
| |
'புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை, |
|
எனலூழ் வகை எய்திற்று' என்று ஏற்றுக்கொண்ட |
|
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி, |
|
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன், |
|
55 |
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், |
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து. |
|
என ஆங்கு- |
|
| |
'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு' எனப் |
|
பார்ப்பார் ஒழிந்தார், படிவு. |
|
60 |
'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று, |
அந்தணர் தோயலர், ஆறு. |
|
'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென' |
|
ஐயர், வாய்பூசுறார், ஆறு. |
|
| |
விரைபு இரை விரை நுரை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல், |
|
65 |
கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர் தரு நுரை, |
நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல் கரை புரளிய செலும்மறி கடல், |
|
புகும் அளவுஅளவு இயல் இசை சிறை தணிவின்று,வெள்ள மிகை. |
|
| |
வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில் |
|
மணி அணி யானைமிசை, மைந்தரும் மடவாரும், |
|
70 |
நிரைநிரை குழீஇயினர் உடன் சென்று, |
குரு மணி யானை இயல் தேர்ப் பொருநன் |
|
திருமருத முன்துறை முற்றம் குறுகி, |
|
தெரி மருதம் பாடுப, பிணி கொள் யாழ்ப் பாணர். |
|
பாடிப் பாடி, பாய்புனல் |
|
75 |
ஆடி ஆடி, அருளியவர் |
ஊடி ஊடி, உணர்த்தப் புகன்று |
|
கூடிக் கூடி, மகிழ்பு மகிழ்பு, |
|
தேடித் தேடி, சிதைபு சிதைபு, |
|
சூடிச் சூடி, தொழுது தொழுது, |
|
80 |
மழுபொடு நின்ற மலி புனல் வையை |
விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி, |
|
இமிழ்வது போன்றது, இந் நீர்-குணக்குச் சான்றீர்! |
|
முழுவதும் மிச்சிலா உண்டு. |
|
| |
சாந்தும், கமழ் தாரும், கோதையும், சுண்ணமும், |
|
85 |
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன |
பூவினும், அல்லால், சிறிதானும் நீர் நிறம் |
|
தான் தோன்றாது-இவ் வையை ஆறு. |
|
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் |
|
கழு நீர மஞ்சனக் குங்குமக் கலங்கல் |
|
90 |
வழி நீர்; விழு நீர அன்று-வையை. |
| |
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன், |
|
உரு கெழு கூடலவரோடு, வையை |
|
வரு புனல் ஆடிய தன்மை பொருவுங்கால்- |
|
இரு முந்நீர் வையம் படித்து என்னை? யான் ஊர்க்கு |
|
95 |
ஒரு நிலையும் ஆற்ற இயையா! அரு மரபின், |
அந்தர வான் யாற்று, ஆயிரம் கண்ணினான் |
|
இந்திரன் ஆடும் தகைத்து. |
|
தி 3. வையை |
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப, | |
... | |
செறுநர் விழையாச் செறிந்த நம் கேண்மை | |
மறு முறையானும் இயைக! நெறி மாண்ட | |
5 |
தண் வரல் வையை எமக்கு. |
|
தி 4. வையை |
தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் | |
பரிமா நிரையின் பரந்தன்று வையை. |
|